Page Loader
KH233 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கமலின் வேட்டையாடு விளையாட்டு திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

KH233 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

எழுதியவர் Srinath r
Oct 06, 2023
03:03 pm

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கமல்ஹாசனின் #233 ஆவது திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 'இந்தியன்-2' திரைப்படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அடுத்து எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ காட்சிகளை, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 'ரைஸ் டு ரூல்' என்னும் அடைமொழியுடன் வெளியாகி உள்ள காட்சிகளால், இது அரசியல் திரைப்படமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது. தவிர இயக்குனர் வினோத் மற்றும் கமலஹாசன் சமீபத்தில் விவசாயிகளை சந்தித்த புகைப்படங்களும் வெளியானது. இதனால் இத்திரைப்படம் விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்த திரைப்படமாக இருக்கலாம் எனவும் குறிப்பிடுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

KH233 திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட கமல்