டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்; எல்லைகளில் போலீசார் குவிப்பு
மத்திய அரசிடம், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 13-ஆம் தேதி 'டெல்லி சலோ' என்ற முற்றுகை போராட்டத்தை நடத்த விவசாயிகள் சங்கங்கள் திட்டமிட்டுள்ளது. இதனால், டெல்லி-ஹரியானா எல்லையிலும், பஞ்சாப்-ஹரியானா எல்லையான அம்பாலா, ஜிண்ட் மற்றும் ஃபதேஹாபாத் மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் எல்லை பகுதிகளில் விவசாயிகளைத் தடுக்க சீல் வைக்கப்பட்டுள்ளன. அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய ஏழு மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை நிறுத்தி வைக்க ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், பிப்ரவரி 12 ஆம் தேதி அவர்களின் கோரிக்கைகளை விவாதிக்க மத்திய அரசு அவர்களை கூட்டத்திற்கு அழைத்துள்ளது