NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 7,563 கன அடியாக உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 7,563 கன அடியாக உயர்வு
    மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 7,563 கன அடியாக உயர்வு

    மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 7,563 கன அடியாக உயர்வு

    எழுதியவர் Nivetha P
    Nov 08, 2023
    07:32 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு மழை சரியாக பெய்யாத காரணத்தினால் அணையின் நீர் இருப்பு குறைந்தது.

    இதனால் பாசனத்திற்கான நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    குடிநீர் தேவைக்காக மட்டும் 500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

    இதனிடையே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பருவமழை பெய்ய துவங்கியதால் அணையின் நீர்மட்டம் உயர துவங்கியதாக தகவல்கள் வெளியானது.

    கடந்த 3ம் தேதி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 52.73 அடியில் இருந்து 52.95 கன அடியாக உயர்ந்துள்ளது என்று செய்திகள் வெளியானது.

    இதனை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக அணையில் இருந்து நீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்த வண்ணம் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

    உயர்வு 

    அணையின் தற்போதைய நீர் இருப்பு 20.79 டி.எம்.சி.

    இந்நிலையில், தற்போது வந்துள்ள தகவல்படி மேட்டூர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறதாம்.

    ஆனால் அணைக்கு வரும் நீர்வரத்தினை விட குறைந்த அளவில் தான் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்பது குறிப்பிடவேண்டியவை.

    இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    அதனால் அணையின்நீர்வரத்து இன்றைய(நவ.,8) நிலவரப்படி, 6,498 கன அடியில் இருந்து வினாடிக்கு 7,563 கன அடியாக உயர்ந்துள்ளது.

    அணையில் தற்போதைய நீர் இருப்பு 20.79 டி.எம்.சி.யாக உள்ளது.

    அணையின் நீர்மட்டம் தற்போது 54.55 அடியில் இருந்து 54.85 அடிக்கு உயர்ந்துள்ள நிலையில், குடிநீருக்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 500 கன அடியில் இருந்து 250 கன அடியாக குறைந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மழை
    குடிநீர்
    விவசாயிகள்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    மழை

    வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை; ஹரியானா துணை முதல்வர் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் டெல்லி
    தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை  தெலுங்கானா
    சென்னை நகரில் இரவு பெய்த கனமழை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வானிலை ஆய்வு மையம்

    குடிநீர்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தமிழக தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு  தேனி
    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு
    சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு   ராமேஸ்வரம்
    தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார் தமிழ்நாடு

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025