
கர்நாடகத்தை கண்டித்து டெல்டா விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவேரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் அக்டோபர் 11 ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என திமுகவின் விவசாய அணி செயலாளர் ஏகேஎஸ் விஜயன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசை கண்டித்தும், காவிரியில் தண்ணீர் பெற்றுத்தராத ஒன்றிய அரசை கண்டித்தும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்துறைகளுக்கு பின்னும் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது.
மேலும் கர்நாடகத்திலும், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க கூடாது என பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
அக்டோபர் 11 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு
#JUSTIN || காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அக்.11ம் தேதி முழு அடைப்பு போராட்டம்
— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு #kaveriwaterissue pic.twitter.com/lxSJSyPg4L