"விவசாயக் கடன் ரத்து; இலவச உயர்கல்வி!": டெல்டாவில் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அதிரடி வாக்குறுதிகள்
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற அக்கட்சியின் இரண்டாம் கட்ட பரப்புரை கூட்டத்தில் விவசாயம் மற்றும் பொதுமக்களுக்கான முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். ஏற்கனவே வேலூரில் முதற்கட்ட வாக்குறுதிகளை வெளியிட்ட நிலையில், டெல்டா மண்ணில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
முக்கிய அறிவிப்புகள்
விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள்
விவசாயிகளின் நலனை மையமாக வைத்து பேசிய விஜய், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றார். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு 50% கடன் தள்ளுபடி குறித்து ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், உரத்தட்டுப்பாடு இல்லாத சூழல் உருவாக்கப்படும் என்றும், விவசாயத்திற்கு எதிரான மத்திய அரசின் திட்டங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
வாக்குறுதி 🙏
— Prasanna OG (@OGprasanna) March 4, 2026
2 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பத்தில் அரசு பணியில் யாரும் இல்லாத பட்சத்தில் அவர்கள் குழந்தைகளின் மருத்துவ , பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி செலவை அரசே ஏற்கும் 🔥🔥 pic.twitter.com/Ve8XtsbjCf
சீர்திருத்தங்கள்
கல்வி மற்றும் ரேஷன் சீர்திருத்தங்கள்
விவசாயக் கூலிகள் மற்றும் 2 ஏக்கர் வரை நிலம் கொண்ட நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி செலவுகளை அரசே ஏற்கும் என்ற முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். பொது விநியோகத் திட்டத்தில்(ரேஷன்), 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு கடை என்ற வீதத்தில் புதிய கடைகள் திறக்கப்படும் என்றும், அரிசி தவிர மற்ற பொருட்கள் பாக்கெட்டுகளில் விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார். நெல் கொள்முதல் நிலையங்களில் கமிஷன் முறையை ஒழித்து, முறையான சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்றும், மீனவர் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பிற்கு தனது அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் விஜய் தனது உரையில் குறிப்பிட்டார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
வாக்குறுதி 🔥#சோழநாட்டில்_தளபதி pic.twitter.com/OoheTxy31X
— Vijay Fans Trends (@VijayFansTrends) March 4, 2026