மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை; பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள்
பல விவசாய சங்கங்கள் இன்று 'பாரத் பந்த்' போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், டெல்லி-என்சிஆர் பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடுவதைத் தடைசெய்யும் வகையில் 144 பிரிவு விதிக்கப்பட்டுள்ளது. நொய்டாவை தளமாகக் கொண்ட பாரதிய கிசான் பரிஷத், நாடு தழுவிய 'பாரத் பந்த்' போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து, தீவிரப்படுத்தியுள்ளனர். வியாழன் அன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்களுக்கும், மூன்று மத்திய அமைச்சர்களுக்கும் இடையே நடந்த ஐந்து மணி நேர பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மற்றொரு சுற்று விவாதம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 18) நடைபெற உள்ளது.
பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள்
ஏற்கெனவே இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய 'பாரத் பந்த்' மாலை 4 மணி வரை அமலில் இருக்கும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை இந்தியாவின் முக்கிய சாலைகளில் மாபெரும் 'சக்கா ஜாம்' போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள துணை ராணுவப் படைகள் தங்களைத் தூண்டிவிடுகின்றன என்று விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் டல்வால் கூறினார். நேற்று மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, "நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல" என்று அவர் மேலும் கூறினார். இதற்கு தீர்வு கிடைக்கும் என்று விவசாயிகள் நம்புவதாகவும், இல்லையென்றால் அவர்களின் போராட்டம் தீவிரமடையும் என்றும் அவர் கூறினார்.