விவசாயிகளே அலெர்ட்; பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி பெற இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்
செய்தி முன்னோட்டம்
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா இந்தியா முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு முக்கியமான நிதி உதவியை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தில் மூன்று தவணையாக ₹2,000 என ஆண்டிற்கு மொத்தமாக ₹6,000 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் 19 வது தவணை நெருங்கி வரும் நிலையில், விவசாயிகள் பலன்களைப் பெற திட்டத்தின் தகுதித் தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த முறை கூடுதலாக விவசாயிகள் தங்கள் நில உரிமை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதி
தகுதி அளவுகோல்கள் மற்றும் தேவையான செயல்கள்
முதலில் விவசாயிகள் கட்டாய இ-கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும். இதை ஆன்லைனில் http://pmkisan.gov.in அல்லது அருகிலுள்ள பொது சேவை மையத்தில் செய்யலாம்.
இந்த படிநிலையை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டால், பணம் பெறுவது தள்ளிப்போகலாம். அடுத்து பூ-சத்யபன் எனப்படும் நில உரிமை சார்பார்ப்பை மேற்கொள்ள வேண்டும்.
பணம் பெறுவதற்கான தகுதியை உறுதிப்படுத்த நில விவரங்கள் சரிபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கையை இன்னும் முடிக்காத விவசாயிகள் உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இறுதியாக உங்கள் ஆதார் அட்டையை உங்கள் வங்கிக் கணக்குடன் இணைப்பது மிகவும் முக்கியமானது.
இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யாதவர்கள் உடனடியாக வங்கி கிளைக்குச் சென்று இணைக்கவும்.
நிதி
நிதியை சிக்கலின்றி பெறலாம்
மேலே குறிப்பிட்டுள்ள மூன்று செயல்முறைகளையும் பூர்த்தி செய்வதன் மூலம், விவசாயிகள் தங்குதடையின்றி கிசான் சம்மன் நிதியைப் பெறலாம்.
கிசான் சம்மன் நிதியில் விவசாயிகள் அல்லாதோர் மோசடியாக நிதியைப் பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில், அதை நிவர்த்தி செய்ய, இந்த முறையிலிருந்து நிதியைப் பெற நில உரிமை ஆவணத்தை சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நிலத்தின் உரிமை தந்தை அல்லது குடும்பத்தில் வேறு உறுப்பினர் பெயரில் இருந்தாலும் நிதி கிடைப்பதில் சிக்கலை எதிர்கொள்ளலாம் என்பதால், நிலத்தின் உரிமையை விவசாயிகள் தங்கள் பெயருக்கு மாற்றி ஆவணத்தை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.