'நிபந்தனைகளுடன் மத்திய அரசிடம் பேசுவார்த்தை நடத்த தயார்': விவசாய அமைப்புகள்
நிபந்தனைகளுக்கு உட்பட்டு மத்திய அரசிடம் பேசுவார்த்தை நடத்த தயார் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தையை போராட்ட இடத்திலோ அல்லது சண்டிகரிலோ நடத்த வேண்டும் என விவசாயிகள் நிபந்தனை விதித்துள்ளனர். விவசாயிகளின் 'டெல்லி சலோ' போராட்டம் இரண்டாவது நாளாக நடந்து வரும் நிலையில், ட்ரோன்கள் மூலம் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதை தடுப்பதற்காக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பட்டங்களை பறக்கவிட்டு வருகின்றனர். பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) மற்றும் பிற விவசாய சீர்திருத்தங்களுக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தைக் கோரி, டெல்லியை நோக்கி ஒரு பெரும் பேரணியை நேற்று தொடங்கினர். இந்நிலையில், அந்த போராட்டத்தை நடத்தும் முக்கிய விவசாயக்குழு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்துள்ளது.