NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்
    கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.73 கோடி நிதி ஒதுக்கீடு

    தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 20, 2024
    12:03 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அரசின் இந்தாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை தாக்கல் செய்தார்.

    இது திமுக அரசின் 4-வது வேளாண் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பட்ஜெட் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்:

    10 லட்சம் வேப்ப மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு.

    நடப்பு ஆண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும்.

    மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.

    எள் சாகுபடியை அதிகரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.

    ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு உதவ ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு.

    வேளாண் பட்ஜெட் 

    விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

    "ஒரு கிராமம் ஒரு பயிர்" திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.

    விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய கோவையில் ஆய்வகம் அமைக்கப்படும்.

    கன்னியாகுமரியில் தேன் பொருட்களுக்கு பரிசோதனை கூடம் அமைத்து பயிற்சி வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு.

    சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த ரூ.12.4 கோடி நிதி ஒதுக்கீடு.

    கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.73 கோடி நிதி ஒதுக்கீடு.

    கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையுடன் டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்.

    முந்திரி சாகுபடியை அதிகரிக்க ரூ.3.36 கோடி ஒதுக்கீடு.

    பயிர் காப்பீடு வழங்க ரூ.1775 கோடி ஒதுக்கீடு.

    தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழகம்
    விவசாயிகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழக அரசு

    வாயுக்கசிவு காரணமாக எண்ணூர் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல் - தமிழக அரசு  தமிழ்நாடு
    குழாய் மூலம் அமோனியா அனுப்பப்படாது என கோரமண்டல் நிறுவனம் அறிவிப்பு   சென்னை
    'வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்' - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்  மு.க ஸ்டாலின்
    வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களுக்கு இன்று முதல் நிவாரண தொகை வழங்கப்படுகிறது  கனமழை

    தமிழகம்

    தமிழகத்தில் கொரில்லா கிளாஸ் தயாரிக்க ஒப்பந்தமிட்டுள்ளது கார்னிங் நிறுவனம் தமிழக அரசு
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் செய்திகள் கிரிக்கெட்
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    இன்று ஸ்பெயினுக்கு புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025