
பஞ்சாபில் ரயில்களை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டம்; மத்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை எனத்தகவல்
செய்தி முன்னோட்டம்
விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நடத்திவரும் நிலையில், முக்கிய கோரிக்கைகள் மீது தீர்வு காணும் வகையில், இன்று மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் இன்று மாலை வீடியோ கான்பரன்சிங் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையேயான முந்தைய சந்திப்புகள் பலனைத்தராததால், பிப்ரவரி-13, முதல் விவசாயிகள் தங்கள் எதிர்ப்புப் பேரணியைத் தொடங்கினர்.
நேற்று, புதன்கிழமை, ராஜ்நாத் சிங் மற்றும் அர்ஜுன் முண்டா உள்ளிட்ட மூத்த மத்திய அமைச்சர்கள், விவசாயிகள் போராட்டம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதித்ததாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம்
பஞ்சாபை முற்றுகையிட தீர்மானம்
முன்னதாக, பாரதிய கிசான் யூனியன் மற்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) பஞ்சாப் பிரிவு ஆகியவற்றின் ஹர்மீத் சிங் கடியான் பிப்ரவரி 16ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் பிப்ரவரி 15ஆம் தேதி பஞ்சாப் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கூடுதலான போராட்டங்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான ஷம்பு எல்லையில் பாதுகாப்புப் படையினர், தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகளைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
சில போராட்டக்காரர்கள் கற்களை வீசி பதிலடி கொடுத்தனர். போராட்டங்களை கண்காணித்து வந்த போலீஸ் டிரோனை வீழ்த்தும் முயற்சியில் ஒரு சில விவசாயிகள் பட்டம் பறக்கவிட்டனர்.