காவிரி விவகாரம் - தமிழக பாஜக சார்பில் அக்.,16ம் தேதி உண்ணாவிரத போராட்டம்
செய்தி முன்னோட்டம்
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்போவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.
இது குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் மோடி கடும் முயற்சி செய்து காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்தார்.
அதனை தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நீர் வந்து கொண்டிருந்தது.
இதனிடையே கர்நாடகாவில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
அதன் பின்னரே தமிழகத்திற்கு நீர் திறந்து விடாமல் திட்டமிட்டு தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டம்
கும்பகோணத்தில் போராட்டம் நடக்கும் என அறிவிப்பு
மேலும் அவர், "80%க்கும் மேலாக கர்நாடகா அணைகளில் நீர் இருக்கும் பட்சத்தில் கூட்டணி கட்சியிடம் பேசி காவிரிநீரினை பெற்று தராமல் தமிழக ஆளுங்கட்சி போராட்டம் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல"என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் நலனுக்காக தமிழக பாஜக சார்பில் வரும் அக்.,16ம் தேதி கும்பகோணம் மாவட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்போவதாகவும் அறிக்கையில் அறிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த போராட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில பொது செயலர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இன்று தமிழக டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த அறிவிப்பு மேலும் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.