
மீண்டும் ராஜ்ய சபா MP ஆகிறார் எல்.முருகன்
செய்தி முன்னோட்டம்
மத்தியபிரதேசத்துக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவார் என பாஜக கட்சி அறிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி 27ஆம் தேதி, இந்தியாவிலுள்ள 15 மாநிலங்களில், 56 மாநிலங்களவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய நாளையே (15-பிப்ரவரி) கடைசி நாள்.
இந்த நிலையில் தான், மத்தியபிரதேசத்தின் மாநிலங்களவை பதிவுக்கு இணை அமைச்சர் எல்.முருகனின் பெயரை பரிந்துரைத்துள்ளது மத்திய பாஜக அரசு.
அதேபோல, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிஷா மாநிலங்களவை பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.
மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து, காங்கிரசில் இருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்த அஷோக் சவான் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
குஜராத் மாநிலத்தில் இருந்து ஜே.பி.நட்டா தேர்வு
#JustIn | குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
— Sun News (@sunnewstamil) February 14, 2024
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசில் இருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்த அசோக் சவான் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிறார். #SunNews | #JPNadda | #MP
ட்விட்டர் அஞ்சல்
ராஜ்ய சபா MP ஆகிறார் எல்.முருகன்
ம.பி-யில் இருந்து எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்படுகிறார் | L Murugan | BJP#vthamizh #vthamizhdigital #LMurugan #bjp #Election2024 pic.twitter.com/t5UKN2dZyp
— V Thamizh (@vthamizhdigital) February 14, 2024