Page Loader
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் பாஜகவில் சேர வாய்ப்பு 

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் பாஜகவில் சேர வாய்ப்பு 

எழுதியவர் Sindhuja SM
Feb 17, 2024
02:48 pm

செய்தி முன்னோட்டம்

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் ஆகியோர் பாஜகவில் சேரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் முடிவுகளால் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று மத்தியப் பிரதேச பாஜக தலைவர் வி.டி.சர்மா நேற்று கூறியிருந்த நிலையில், முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் சமூக வலைதளங்களில் உள்ள தனது சுய விவரங்களில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பெயரை நீக்கியுள்ளார். இதனையடுத்து, நகுல்நாத்தும் அவரது தந்தை கமல்நாத்தும் பாஜகவுக்கு கட்சி தாவ இருக்கிறார்கள் என்ற வதந்திகள் கடந்த சில நாட்களாகவே பரவி வருகிறது. கமல்நாத் இன்று பிற்பகலில் புது டெல்லிக்குசெல்ல உள்ளார். மேலும் அவர் பாஜக தலைவர்களுடன் சந்திப்பு நடத்துவார் என்று ஊகங்கள் எழுந்துள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

முன்னாள் முதல்வர் கமல்நாத் பாஜகவில் சேர வாய்ப்பு