மத்திய பிரதேச பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் பலி; 100 பேர் காயம்
செய்தி முன்னோட்டம்
மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தா மாவட்டத்தில் உள்ள பைராகர் கிராமத்தில் இருக்கும் பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 100 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக ஹர்தா மாவட்ட மாஜிஸ்திரேட் ரிஷி கார்க் கூறியுள்ளார்.
மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) ஆம்புலன்ஸ்களுடன் சம்பவ இடத்தில் உள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்ட போது, பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் பதறி ஓடும் மக்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
மத்திய பிரதேச பட்டாசு ஆலையில் வெடி விபத்து
#JUSTIN மத்திய பிரதேசத்தின் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் பதறி ஓடும் மக்கள் #Firecrackerfactory #factoryblast #MadhyaPradesh #crackers #News18TamilNadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/KwKu0lLcbm
— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 6, 2024