சட்டமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது
சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற இருந்த நிலையில், அது டிசம்பர் 5ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை, காலை 8 மணிக்கு துவங்கியது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகு வெளியாகும் கருத்துக்கணிப்புகளின் படி, சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸுக்கும், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கும் முதலிடம் கிடைக்கும் என்று பல்வேறு நிறுவனங்கள் கணித்திருந்தன. காலை 9:30 மணி நிலவரப்படி, ராஜஸ்தானில், பாஜக முன்னிலையில் உள்ளது தெலுங்கானா மற்றும் சட்டிஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.