மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு
மத்திய பிரதேசத்தின் முதல்வரை இறுதியாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. தற்போது மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவை அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தின் தெற்கு எம்.எல்.ஏ ஆவார். இன்று காலை முதல், போபாலில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதியாக இவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, கூட்டத்தினரால் ஏற்கப்பட்டது. 58 வயதான மோகன் யாதவ் பாஜகவின் சட்டமன்ற தலைவராக வழிநடத்த, மத்திய அமைச்சரவையிலிருந்து அண்மையில் ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதிய சட்டசபை சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மோகன் யாதவ், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் ஆதரவுடன், சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கத்தில் உயர் கல்வி அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.