வாக்குப்பதிவுக்கு முன் பாஜகவில் இணைந்த இந்தூர் வேட்பாளர்: காங்கிரஸுக்கு அடிக்கு மேல் அடி
செய்தி முன்னோட்டம்
மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இன்று தனது இரண்டாவது மக்களவை வேட்பாளரை இழந்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளராக இருந்த அக்ஷய் பாம் போட்டியிலிருந்து விலகி பாஜகவில் இன்று இணைந்தார்.
மத்தியப் பிரதேச பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியாவின் இது குறித்து பதிவிட்டிருக்கிறார்.
அக்ஷய் பாம் காரில் தன்னுடன் இருப்பது போல் அவர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்ததை அடுத்து, இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
"இந்தூர் மக்களவையின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி பாம் பாஜகவுக்கு வரவேற்கப்படுகிறார்" என்று விஜயவர்கியா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தியா
மே 13 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தூர் தேர்தல்
"பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, முதல்வர் மோகன் யாதவ் மற்றும் மாநிலத் தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் தலைமையில்" இது நடைபெறுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே 13 ஆம் தேதி நடைபெற உள்ள நான்காம் கட்டத் தேர்தலில் இந்தூர் மக்கள் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில், இன்று தான் இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
"காங்கிரஸின் அக்ஷய் பாம் உட்பட 3 வேட்பாளர்கள் உரிய நடைமுறைப்படி இன்று வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இந்த செயல்முறை வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளது" என்று மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்காக அக்ஷய் பாம், பாஜக எம்எல்ஏ ரமேஷ் மெண்டோலாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார்.