மத்திய பிரதேச பொது செயலாளர் கமல்நாத்தை பதவி நீக்க இருக்கிறதா காங்கிரஸ்?
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் நடந்த மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அம்மாநில காங்கிரஸ் பொது செயலாளர் கமல்நாத் பதவி விலக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி தான் அவரை பதவி விலக வலியுறுத்தியது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் நாளை நடைபெற இருக்கும் INDIA கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கலந்துகொள்ள இருக்கிறார்.
அந்த கூட்டத்திற்கு பிறகு, அவர் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை தனியாக சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மபி., சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
ட்ஜ்கவ்ஜ்க்
பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய பாஜக
அதன்படி, மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்ற தொகுதிகளுள் 163 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
ஆனால், காங்கிரஸ் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததையடுத்து ராகுல் காந்தியுடன் கமல்நாத் தொலைபேசியில் பேசினார்.
மத்திய பிரதேசத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும் என்று அக்கட்சி நினைத்து கொண்டிருந்த நிலையில், இந்த படுதோல்விக்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
தோல்விக்கு காரணமான காரணிகளை ஆய்வு செய்ய நாளை அனைத்து வேட்பாளர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ட்ஜ்கவ்க்
காங்கிரஸ் கட்சி தலைமைகளின் நிலைப்பாடு
இந்நிலையில், நாளை கார்கேவை தனியாக சந்தித்து பேச இருக்கும் கமல்நாத், மபி., பொது செயலாளராக நீடிக்க விரும்புகிறாரா என்பது குறித்து முடிவு செய்வார்.
தொகுதி பங்கீட்டின் போது, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஜே.டி.யு தலைவர் நிதிஷ் குமார் ஆகியோர் குறித்து கமல்நாத் பேசியது காங்கிரஸ் கட்சி தலைமைகளுக்கு பிடிக்கவில்லை, அதனால் அவரை கண்டிப்பாக பதவி விலக வலியுறுத்துவார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது.
தொகுதி பங்கீட்டின் போது, சமாஜ்வாடி கட்சி 4 முதல் 6 இடங்களை மட்டுமே கேட்டது. ஆனால், அதற்கு கமல்நாத் ஒப்புக்கொள்ளவில்லை.
மேலும், 2024 பொது தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்ட INDIA கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் குறித்தும் கமல்நாத் தவறாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.