ஒடிசாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு இருமடங்காக உயர்வு!
செய்தி முன்னோட்டம்
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அரசு, கல்வித்துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. மாநிலத்தின் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வித் துறையில் பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினருக்கான (ST) இடஒதுக்கீட்டு அளவை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தி முதல்வர் மோகன் சரண் மாஜி உத்தரவிட்டுள்ளார்.
இட ஒதுக்கீடு சதவீத மாற்றம்:
புதிய இடஒதுக்கீடு கொள்கை:
சனிக்கிழமை இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த இடஒதுக்கீடு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் (ST): இடஒதுக்கீடு 12 சதவீதத்திலிருந்து 22.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC): இடஒதுக்கீடு 8 சதவீதத்திலிருந்து 16.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் (SCBC): இதுவரை இட ஒதுக்கீடு இல்லாத நிலையில், தற்போது முதன்முறையாக 11.25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மொத்த இடஒதுக்கீடு: சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டையும் சேர்த்து, மொத்த இடஒதுக்கீடு அளவு 50 சதவீதத்திற்குள் இருக்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் மற்றும் இதர படிப்புகள்:
இடங்களின் எண்ணிக்கையில் மாற்றம்:
புதிய கொள்கையின்படி, மருத்துவப் படிப்புகளில் (UG/PG) இடங்கள் பின்வருமாறு உயரும்: எஸ்டி (ST) 290 இடங்களிலிருந்து 545 இடங்களாக உயர்வு. எஸ்சி (SC) 193 இடங்களிலிருந்து 393 இடங்களாக உயர்வு. பிற்படுத்தப்பட்டோர் (SCBC): புதிதாக 272 இடங்கள் ஒதுக்கீடு. மொத்தமுள்ள 44,579 பொறியியல் இடங்களில் 10,030 இடங்கள் எஸ்டி மாணவர்களுக்கும், 7,244 இடங்கள் எஸ்சி மாணவர்களுக்கும், 5,015 இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும். இது தவிர கால்நடை அறிவியல், ஆயுர்வேதம், ஹோமியோபதி, விவசாயம், கட்டிடக்கலை மற்றும் சினிமா தொழில்நுட்பம் போன்ற அனைத்து தொழில்நுட்பப் படிப்புகளுக்கும் இந்தப் புதிய கொள்கை பொருந்தும் என முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.
முதல்வரின் விளக்கம்
சமூக நீதிக்கான ஒரு மைல்கல்:
சமூக நீதிக்கான ஒரு மைல்கல்: இதுகுறித்து முதலமைச்சர் பேசுகையில், கடந்த கால அரசுகள் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி உரிமைகளை உறுதி செய்யத் தவறிவிட்டன. அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு இல்லாதது சமூக நீதியை நிலைநாட்டத் தடையாக இருந்தது. எங்கள் அரசு அதனைச் சரி செய்துள்ளது எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ஒடிசா அரசின் இந்த அதிரடி மாற்றம் அம்மாநிலத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், கல்வித் துறையில் பின்தங்கிய சமூகத்தினர் முன்னேற இது பெரும் ஊக்கமளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.