LOADING...
தங்கம் வெள்ளி விலைகள் அதிரடியாக குறைந்தது; இன்றைய சவரன் விலை இதுதான்
ஜூன் 10 தங்க விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது

தங்கம் வெள்ளி விலைகள் அதிரடியாக குறைந்தது; இன்றைய சவரன் விலை இதுதான்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 10, 2026
11:03 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், புதன்கிழமை (ஜூன் 10) தங்க விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹400 குறைந்து ₹13,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹3,200 குறைந்து ₹1,10,400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹436 குறைந்து ₹15,055 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹3,488 குறைந்து ₹1,20,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹350 குறைந்து ₹11,570 ஆகவும், ஒரு சவரன் ₹2800 குறைந்து ₹92,500 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலையும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 குறைந்து ₹260 ஆகவும், ஒரு கிலோ ₹2,60,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் போருக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில், இரு தரப்பிற்கும் இடையே சிறுசிறு தாக்குதல்கள் நடைபெறும் நிலையில், தங்கம் விலை கடுமையாக குறைந்துள்ளது நகை வாங்க திட்டமிட்டவர்களிடையே மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisement