LOADING...
சிபிஎஸ்இ பள்ளிகளில் இனி இது கட்டாயம்; ஒவ்வொரு மாணவியும் பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
சிபிஎஸ்இயின் புதிய மாதவிடாய் சுகாதார விதிகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் இனி இது கட்டாயம்; ஒவ்வொரு மாணவியும் பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

எழுதியவர் Sekar Chinnappan
Mar 22, 2026
11:13 am

செய்தி முன்னோட்டம்

இந்தியக் கல்வி முறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, சிபிஎஸ்இ தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை (MHM) முறைகளைக் கட்டாயமாக்கியுள்ளது. ஜனவரி 20, 2026 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், மாதவிடாய் சுகாதாரம் என்பது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டம் 21ன் படி, கௌரவமாக வாழ்வதற்கான உரிமையில் மாதவிடாய் சுகாதாரமும் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. முறையான வசதிகள் இல்லாததால் மாணவிகள் பள்ளிக்கு வராமல் இருப்பதையும், படிப்பைப் பாதியிலேயே நிறுத்துவதையும் தடுக்க இந்தத் தீர்ப்பு வழிவகை செய்கிறது.

புதிய வசதிகள்

பள்ளிகளில் அமலாகும் புதிய வசதிகள்

சிபிஎஸ்இ பள்ளிகள் இனிமேல் கீழ்க்கண்ட வசதிகளைக் கட்டாயமாகச் செய்து தர வேண்டும். மாணவிகளுக்கெனத் தனிப்பட்ட, தூய்மையான மற்றும் பாதுகாப்பான கழிவறைகள் மற்றும் குளிக்கும் இடங்கள் இருக்க வேண்டும். பள்ளிகளில் எளிதாகப் பெறக்கூடிய வகையில் சானிட்டரி நேப்கின்கள் (முடிந்தவரை மக்கும் தன்மையுடையவை) கிடைக்க வழி செய்ய வேண்டும். மாதவிடாய் காலத் தேவைகளுக்கெனப் பள்ளிகளில் பிரத்யேக 'MHM மூலைகள்' (MHM Corners) அமைக்கப்பட வேண்டும். பயன்படுத்திய நேப்கின்களைச் சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த முறையான வசதிகள் இருக்க வேண்டும்.

கல்வி

விழிப்புணர்வு மற்றும் கல்வி

வெறும் கட்டிட வசதிகள் மட்டும் போதாது, இது குறித்த மனமாற்றமும் அவசியம் என்று சிபிஎஸ்இ வலியுறுத்துகிறது. மாதவிடாய் மற்றும் பருவமடைதல் குறித்த முறையான விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும். மாணவிகள் எவ்விதத் தயக்கமும் இன்றி இது குறித்துப் பேசும் சூழலைப் பள்ளிகள் உருவாக்க வேண்டும். இதற்காக NCERT மற்றும் SCERT வழிகாட்டுதல்களின்படி பாடத்திட்டங்கள் மற்றும் உரையாடல்கள் வடிவமைக்கப்பட வேண்டும். இந்த விதிகள் காகித அளவில் மட்டும் இல்லாமல், செயலில் இருப்பதை உறுதி செய்யக் கடுமையான கண்காணிப்பு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளிகள் தங்களின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர அறிக்கையை ஆன்லைன் போர்ட்டலில் சமர்ப்பிக்க வேண்டும். முதல் கட்ட அறிக்கைகளை மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 30, 2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement