LOADING...
பொதுத்தேர்வு 2026: 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் ரிக்ரோல் கியூஆர் கோடு சர்ச்சை; சிபிஎஸ்இ விளக்கம்
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் ரிக்ரோல் கியூஆர் கோடு சர்ச்சை

பொதுத்தேர்வு 2026: 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் ரிக்ரோல் கியூஆர் கோடு சர்ச்சை; சிபிஎஸ்இ விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 10, 2026
07:59 pm

செய்தி முன்னோட்டம்

மார்ச் 9 ஆம் தேதி நடைபெற்ற சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு சமூக வலைதளங்களில் ஒரு வினோதமான காரணத்திற்காகப் பேசப்பட்டு வருகிறது. வினாத்தாளில் இருந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்தபோது, அது பிரபல பாப் பாடகர் ரிக் ஆஸ்ட்லியின் 'Never Gonna Give You Up' என்ற பாடலுக்கு அழைத்துச் சென்றதாக (இணையத்தில் இது Rickrolling என அழைக்கப்படுகிறது) மாணவர்கள் புகாரளித்தனர். இந்தச் சம்பவம் கேள்வித்தாளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், சிபிஎஸ்இ தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.

குழப்பம்

வைரல் புகாரும் குழப்பமும்

தேர்வு முடிந்தவுடன் வினாத்தாளில் இருந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்த மாணவர்கள், அது நேரடியாக ஒரு யூடியூப் வீடியோவிற்குச் சென்றதாக ஸ்கிரீன்ஷாட்டுகளைப் பகிர்ந்து ரெடிட் போன்ற தளங்களில் விவாதித்தனர். அதே சமயம், சில மையங்களில் இருந்த மாணவர்களுக்கு 'A' அல்லது 'Q' போன்ற எழுத்துக்கள் மட்டுமே காட்டியது. இது தொழில்நுட்பக் கோளாறா அல்லது போலியான தகவலா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியது.

விளக்கம்

சிபிஎஸ்இ அளித்த விளக்கம்

இந்த விவகாரம் குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பு உறுதி: கணிதத் தேர்வு வினாத்தாள்கள் முற்றிலும் உண்மையானவை. அதன் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை. கியூஆர் கோடு நோக்கம்: வினாத்தாளின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவே இந்த கியூஆர் கோடுகள் அச்சிடப்படுகின்றன. வீடியோ லிங்க்: ஒரு சில வினாத்தாள் செட்களில் கியூஆர் கோடு யூடியூப் லிங்கிற்குச் சென்றதை வாரியம் ஒப்புக்கொண்டது. இருப்பினும், இது வினாத்தாளின் ரகசியத்தன்மையைப் பாதிக்கவில்லை. எனினும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலையை வாரியம் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இதுபோன்ற தொழில்நுட்பக் குளறுபடிகள் எதிர்காலத் தேர்வுகளில் நடக்காமல் இருக்கத் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது.

Advertisement