'ப்ளாக் பேட்ஜ் கல்லினன் ப்ளூ ஷேடோ' மாடலை அறிமுகப்படுத்தியது ரோல்ஸ் ராய்ஸ்!
செய்தி முன்னோட்டம்
புதிய 'ப்ளாக் பேட்ஜ் கல்லினன் ப்ளூ ஷேடோ' மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். இந்த மாடலில் மொத்தம் 62 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படவிருக்கும் நிலையில், அத்தனை கார்களுமே ஏற்கனவைே வாங்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
பூமியின் வளிமண்டலத்தையும், விண்வெளியையும் பிரிக்கும் எல்லைக் கோடானது கார்மன் லைன் என்றழைக்கப்படுகிறது.
தங்களின் புதிய மாடலை இந்த கார்மன் லைனை மையப்படுத்தி உருவாக்கியிருக்கிறது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்.
கார் முழுவதுமே பெயருக்கேற்ற வகையில் கருப்பு மற்றும் நீல வண்ணங்களாலேயே அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. பூமியின் நீல வண்ணத்தையும், விண்வெளியின் கருப்பு வண்ணத்தையும் குறிப்பிடும் வகையிலேயே இந்த இரண்டு நிறங்களையும் பயன்படுத்தியிருக்கிறது ரோல்ஸ் ராய்ஸ்.
உள்பக்கத்திலும், கார்மன் லைனை மையப்படுத்திய டிசனே அளிக்கப்பட்டிருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ்
இன்ஜின் மற்றும் விலை:
புதிய ப்ளாக் பேட்ஜ் கல்லினன் ப்ளூ ஷேடோ மாடலில் 563hp பவர் மற்றும் 850Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, 6.7 லிட்டர் ட்வின் டர்போ V12 இன்ஜினை பயன்படுத்தியிருக்கிறது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்.
ட்ரான்ஸ்மிஷனுக்காக இந்த இன்ஜினோடு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
உள்பக்கம் நிறம் மாறக்கூடிய டேஷ்போர்டு மற்றும் டோர் பேனல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நீலம், கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களை வெளிப்படுத்துகின்றன டேஷ்போர்டும், டோர் பேனல்களும்.
இந்த கல்லினனின் விலையை ரோல்ஸ் ராய்ஸ் வெளியிடவில்லை. எனினும், இந்தியவில் இதன் விலை ரூ.6.95 கோடிக்கும் மேல் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முன்னர் கூறியது போல வெறும் 62 கார்கள் தான், அதுவும் வாங்கப்பட்டுவிட்டது. எனவே, இந்த மாடல் விற்பனைக்கு இல்லை.