NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் இந்த செப்டம்பரில் வெளியாகவிருக்கும் எஸ்யூவிக்கள்
    இந்தியாவில் இந்த செப்டம்பரில் வெளியாகவிருக்கும் எஸ்யூவிக்கள்
    ஆட்டோ

    இந்தியாவில் இந்த செப்டம்பரில் வெளியாகவிருக்கும் எஸ்யூவிக்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    September 03, 2023 | 06:17 pm 1 நிமிட வாசிப்பு
    இந்தியாவில் இந்த செப்டம்பரில் வெளியாகவிருக்கும் எஸ்யூவிக்கள்
    இந்தியாவில் இந்த செப்டம்பரில் வெளியாகவிருக்கும் எஸ்யூவிக்கள்

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது பிற கார் மாடல்களை விட எஸ்யூவிக்குத் தான் எதிர்பார்ப்பும் தேவையும் அதிகமாக இருக்கிறது. தற்போதைய நிலையில் எஸ்யூவிக்களையே வாடிக்கையாளர்கள் அதிகமாகவும் விரும்புகிறார்கள். இந்த செப்டம்பர் மாதம் எந்தெந்த கார் நிறுவனங்கள் புதிய எஸ்யூவி மாடல்களை வெளியிடவிருக்கின்றன? பார்க்கலாம். ஹோண்டா எலிவேட்: இந்தியாவில் தங்களுடைய புதிய எஸ்யூவியான எலிவேட்டை கடந்த ஜூன் மாதமே அறிமுகப்படுத்திவிட்டது ஹோண்டா. அந்த மாடலை நாளை (செப்டம்பர் 4) வெளியிடவிருக்கிறது அந்நிறுவனம். அதிகபட்சமாக 119hp பவர் மற்றும் 145Nm டார்க்கை வெளிப்படுத்தும், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்ட புதிய எலிவேட் எஸ்யூவியை ரூ.11 லட்சம் விலையில் ஹோண்டா வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் M பெர்ஃபாமன்ஸ் எடிஷன்: 

    இந்தியாவில் ஏற்கனவே தாங்கள் விற்பனை செய்து வரும் 2 சீரிஸின் M பெர்ஃபாமன்ஸ் எடிஷனை வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. 179hp பவர் மற்றும் 280Nm டார்க்கை உற்பத்தி செய்யும், நான்கு சிலிண்டர்கள் கொண்ட, 2.0 லிட்டர், டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பெறவிருக்கிறது இந்த மாடல். ரூ.47 லட்சம் விலையில் இந்தக் கார் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடீஸ்-பென்ஸ் EQE எஸ்யூவி: மேற்கூறிய தங்களது புதிய EV எஸ்யூவியை வரும் செப்டம்பர் 15ல் இந்தியாவில் வெளியிடவிருக்கிறது மெர்சிடீஸ். இந்தியாவில் இது அந்நிறுவனத்தின் மூன்றாவது EVயாக வெளியாகவிருக்கிறது. அதிகபட்சமாக 590 கிமீ ரேஞ்சு கொண்ட இந்த EVயை, ரூ.1.25 கோடி விலையில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ்: 

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பொலிரோ நியோ ப்ளஸை இந்த மாதம் வெளியிடவிருக்கிறது மஹிந்திரா. ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான விலையில் இந்தப் புதிய எஸ்யூவி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 100hp பவர் மற்றும் 260Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய ஒரேயொரு டீசல் இன்ஜினை மட்டுமே இந்த புதிய எஸ்யூவியில் கொடுக்கவிருக்கிறது மஹிந்திரா. வால்வோ C40 ரீசார்ஜ்: இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் XC40 ரீசார்ஜ் (ரூ.56.90 லட்சம்) மாடலை விட சற்றுக் கூடுதலான விலையில் புதிய C40 ரீசார்ஜ் மாடலை நாளை (செப். 4) வெளியிடவிருக்கிறது வால்வோ. மொத்தமாக 408hp பவரை உற்பத்தி செய்யக்கூடிய மோட்டார்கள் மற்றும் 78kWh பேட்டரியை இந்தப் புதிய C40யில் கொடுத்திருக்கிறது வால்வோ.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எஸ்யூவி
    சொகுசு கார்கள்
    ஆட்டோமொபைல்
    எலக்ட்ரிக் கார்

    சமீபத்திய

    எஸ்யூவி

    நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்திய டாடா டாடா மோட்டார்ஸ்
    நான்கு கியர்பாக்ஸ் தேர்வுகளைப் பெறவிருக்கும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டாடா மோட்டார்ஸ்
    செப்டம்பர் 4ல் இந்தியாவில் வெளியாகிறது ஹோண்டாவின் புதிய எலிவேட் ஹோண்டா
    ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எஸ்யூவி கார்களை மீண்டும் சோதனை செய்யும் மஹிந்திரா மஹிந்திரா

    சொகுசு கார்கள்

    புதிய 'நியூ கிளாஸ்' எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியிருக்கும் BMW பிஎம்டபிள்யூ
    இந்தியாவில் தங்களுடைய விலையுயர்ந்த கார் மாடலை வெளியிட்டிருக்கும் போர்ஷே போர்ஷே
    அடுத்த மாதம் வெளியாகிறது சொகுசுக் கார் மாடலான 'ஆஸ்ட்ன் மார்டின் DB12' ஆஸ்டன் மார்டின்
    இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸ் பென்ஸ் இரண்டாம் தலைமுறை GLC  மெர்சிடீஸ்-பென்ஸ்

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் புதிய புல்லட் 350 மாடலை வெளியிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு ராயல் என்ஃபீல்டு
    இந்தியாவில் 5.4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் மாருதி சுஸூகி மாருதி
    இந்தியாவில் புதிய கரிஸ்மா XMR பைக்கை வெளியிட்டுள்ளது ஹீரோ ஹீரோ
    இந்தியாவில் கலப்பு எரிபொருளில் இயங்கும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா கார்

    எலக்ட்ரிக் கார்

    பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா பிரக்ஞானந்தா
    600e கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் காரை 2025இல் களமிறக்க தயாராகி வரும் ஃபியட் எலக்ட்ரிக் வாகனங்கள்
    இசைப் பிரியர்களுக்கு கரோக்கே வசதியை தங்கள் கார்களில் அளிக்கத் திட்டமிட்டிருக்கும் BYD சீனா
    புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களின் பெயர்களை இந்தியாவில் பதிவு செய்திருக்கும் BYD எலக்ட்ரிக் வாகனங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023