LOADING...
ஆடம்பர கார்களின் அணிவகுப்பு: 2026இல் அறிமுகமாகும் டாப் 10 கார்கள்; பிஎம்டபிள்யூ முதல் மெர்சிடிஸ் வரை!
2026இல் அறிமுகமாகும் டாப் 10 சொகுசு கார்கள்

ஆடம்பர கார்களின் அணிவகுப்பு: 2026இல் அறிமுகமாகும் டாப் 10 கார்கள்; பிஎம்டபிள்யூ முதல் மெர்சிடிஸ் வரை!

எழுதியவர் Sekar Chinnappan
Dec 26, 2025
07:36 pm

செய்தி முன்னோட்டம்

2026 ஆம் ஆண்டு இந்திய சொகுசு கார் சந்தையில் ஒரு முக்கியமான ஆண்டாக அமையவுள்ளது. பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடீஸ்-பென்ஸ் மற்றும் வோல்வோ போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய மின்சார வாகனங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஐகானிக் மாடல்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன. தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சொகுசு அம்சங்களில் புதிய பரிமாணத்தை இந்த கார் மாடல்கள் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகனங்கள்

வோல்வோ மற்றும் மெர்சிடிஸ் நிறுவனங்களின் எலக்ட்ரிக் வருகை

வோல்வோ நிறுவனம் தனது முதன்மையான எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான EX90 ஐ 2026ன் மூன்றாவது காலாண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. மேலும், சொகுசு எலக்ட்ரிக் செடான் மாடலான ES90ம் அதே காலகட்டத்தில் அறிமுகமாகும். மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் தனது புதிய CLA EV மாடலை 2026ன் முதல் பாதியில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முற்றிலும் புதிய மின்சார வாகனக் கட்டமைப்பில் (MMA Architecture) உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், திறந்தநிலை சொகுசு அனுபவத்திற்காக G-Class Cabriolet மாடலையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

திட்டங்கள்

ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களின் அதிரடித் திட்டங்கள்

ஆடி நிறுவனம் 2026ன் தொடக்கத்தில் புதிய Q3 எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்துகிறது. இது அதன் முந்தைய மாடல்களை விட பெரியதாகவும், அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாகவும் இருக்கும். மேலும், அதிவேக எலக்ட்ரிக் காரான e-tron GT (Facelift) மற்றும் 756 கிமீ ரேஞ்ச் கொண்ட A6 e-tron மாடல்களும் 2026ல் களமிறங்குகின்றன. பிஎம்டபிள்யூ நிறுவனத்தைப் பொறுத்தவரை, 2026ன் இரண்டாவது காலாண்டில் மேம்படுத்தப்பட்ட iX Facelift மற்றும் இந்தியாவிற்காகவே வடிவமைக்கப்பட்ட நீளமான வீல்பேஸ் கொண்ட i5 LWB மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த கார்கள் அதிக மைலேஜ் மற்றும் மேம்படுத்தப்பட்ட உட்புற வசதிகளுடன் வரவுள்ளன.

Advertisement