Page Loader
மெர்சிடிஸ் AMG S 63 E - சிறப்பு அம்சங்கள் மற்றும் விலையை சரிபார்க்கவும்:
Mercedes-AMG S 63 E காரின் பதிப்பு 1 ஆனது அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது

மெர்சிடிஸ் AMG S 63 E - சிறப்பு அம்சங்கள் மற்றும் விலையை சரிபார்க்கவும்:

எழுதியவர் Siranjeevi
Apr 05, 2023
06:43 pm

செய்தி முன்னோட்டம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது AMG S 63 E மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் டெலிவரியானது அடுத்த மாதம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பான ஸ்டைலான கம்பீரமான இந்த காரின் அம்சங்கள் பற்றி பார்ப்போம். இதில் சிவப்பு AMG லோகோவுடன் கதவு சில் பேனல்கள், சென்டர் கன்சோலில் செதுக்கப்பட்ட பதிப்பு 1 லோகோ மற்றும் AMG தரை விரிப்புகள் உள்ளன. Mercedes AMG S 63 E செயல்திறன் 14.0 லிட்டர், 8-சிலிண்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின், AMG SPEEDSHIFT MCT 9G கியர்பாக்ஸ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தில் இயங்குகிறது.

மெர்சிடிஸ் கார் நிறுவனம்

மெர்சிடிஸ் AMG S 63 E மாடலின் சிறப்புகள் என்ன?

இது, 802hp பவர் மற்றும் 1,430Nm டார்க் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வெளியீட்டை வழங்குகிறது. இந்த கார் ஆனது 0-100 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் கடந்து செல்லும் மற்றும் மணிக்கு 290 கிமீ வேகத்தில் செல்லும். ஜெர்மனியில், Mercedes-AMG S 63 E கார் ஆனது இந்திய மதிப்பில் மட்டுமே சுமார் ரூ. 1.87 கோடி ரூபாய் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தயாரிப்பில் இருக்கும் இந்த கார் மே மாதம் டெலிவரி செய்யப்படும் எனக்கூறப்படுக்கிறது.