விலையுயர்ந்த மெர்சிடிஸ் சொகுசு காரை வாங்கிய துல்கர் சல்மான் - அப்படி என்ன ஸ்பெஷல்?
பிரபல மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மான் இந்தியாவில் விலை உயர்ந்த மெர்சிடிஸ் Maybach GLS 600 சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த ஆடம்பர காரில் இல்லாத வசதிகளே பார்க்க முடியாது. கப்பல் போன்று அவ்வளவு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரை மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் தான் அதிகம் விரும்பி வாங்கி வருகிறார்கள். மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்ஸ் 600 சொகுசு காரின் விலை 2.92 கோடி ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கும். இதுமட்டுமின்றி பெரிய தொகை கொடுத்து ஃபேன்சி நம்பரையும் வாங்கி இருக்கிறார் இவர். அதற்காக மட்டுமே ரூ.1.85 லட்சம் செலவு செய்துள்ளார்.
விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய துல்கர் சல்மான் - சிறப்பு அம்சங்கள் என்ன?
துல்கர் விலையுயர்ந்த கார் வாங்குவது இது முதல் முறை அல்ல, சமீபத்தில் கூட Benz g63 amg ஆடம்பர காரை வாங்கி இருந்தார். மேலும், தற்போது வாங்கி இருக்கும் இந்த காரில் Sun roof ventilated வசதியுடன் மசாஜ் வசதிகள் கொண்ட இருக்கைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு அம்சங்கள் 8 வகையான ஏர் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 360 டிகிரி கொண்ட கேமரா செட் அப், கார் வாஷ் மோட், 4.0 லிட்டர் கொண்ட Twin-turbo வி8 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி பல அம்சங்கள் கொண்ட விலையுயர்ந்த காரையே துல்கர் சல்மான் வாங்கி மேலும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.