Page Loader
மெர்சிடிஸ் பென்ஸ் காரின் புதிய GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் காரின் புதிய GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்!

எழுதியவர் Siranjeevi
Mar 24, 2023
03:09 pm

செய்தி முன்னோட்டம்

ஜெர்மனியின் முன்னணி சொகுசு வாகன தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், அதன் GLA மற்றும் GLB எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த புத்தம் புதிய மாடல்களானது இந்தியாவில் இந்த ஆண்டிற்குள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடல்கள் கார்களில் புதிய கிரில், பம்ப்பர் டிசைன், லைட் சிக்னேச்சர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. காரின் உட்புறத்தில் லெதர் ஸ்டீரிங் வீல், ஹை-பீம் அசிஸ்ட், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. மேலும், இந்த மாடல்களில் 4 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய GLA மற்றும் GLB மாடல்களின் செயல்திறன் மெர்சிடிஸ் AMG டிசைன் செய்யப்பட்டவை.

ட்விட்டர் அஞ்சல்

பென்ஸ் நிறுவனத்தின் GLA மற்றும் GLB சொகுசு கார்கள் அறிமுகம்