விலை உயர்ந்த Mercedes-AMG G 63 பென்ஸ் கார் - தனி சிறப்பு அம்சங்கள் என்ன?
ஜெர்மன் ஆட்டோமோட்டிவ் நிறுவனமான Mercedes-AMG இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் SUV மாடலான G 63 இன் விலைமட்டுமே ரூ. 75 லட்சம், அதிகரித்துள்ளது எனவும், விலை ரூ. 3.3 கோடி (எக்ஸ்-ஷோரூம்) எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த தொகை மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்படும். அத்துடன் ஆர்டிஓ பதிவு கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்ட இதர கட்டணங்களையும் சேர்த்தால் இந்த வாகனத்தின் ஆன்-ரோடு விலை எளிதாக ரூ.4 கோடியை தாண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. ஜெர்மனியை சேர்ந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸுக்கு இந்தியா மிக முக்கியமான சந்தை என்றால் அதில் சந்தேகமே இல்லை.
Mercedes-AMG G 63 பென்ஸ் காரின் சிறப்பு அம்சங்கள் என்ன?
விற்பனையை பொறுத்தவரையில், பிஎம்டபிள்யூ, ஆடி, வால்வோ உள்ளிட்ட பிராண்ட்களை முந்திக்கொண்டு மெர்சிடிஸ்-பென்ஸ் தான் கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் உள்ளது. இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி வாகனத்தில் 4.0 லிட்டர், ட்வின் டர்போ வி8 என்ஜின் ஆனது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. மேலும், கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி வரையில், ஏற்கனவே மெர்சிடிஸ் கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் மட்டுமே மேற்கூறிய இரு கார்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடந்த 2022 காலண்டர் ஆண்டில் 2021 ஆம் ஆண்டை காட்டிலும் சுமார் 41% அதிக மெர்சிடிஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.