இந்தியாவில் வெளியானது '2024 லெக்சஸ் LC 500h' லக்சரி மாடல் கார்!
செய்தி முன்னோட்டம்
தங்களுடைய புதிய 2024 LC 500h மாடல் சொகுசு காரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லெக்சஸ். ஒன்பது பெயின்ட் ஸ்கீம்கள், மூன்று இன்டீரியர் ட்ரிம் ஆப்ஷன்களுடன் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரே வேரியன்ட்டாக இந்த அப்டேட் செய்யப்பட்ட LC 500h-ஐ வழங்குகிறது லெக்சஸ்.
இந்த 4 சீட்டர் கூப் மாடலில் பல்வேறு புதிய மாற்றங்களைச் செய்து, புதிய அப்டேட்கள் சிலவற்றையும் வழங்கியிருக்கிறது லெக்சஸ்.
மினிமலிஸ்ட்டிக்கான டேஷ்போர்டு, மல்ட்டி-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், ஹெட்ல்-அப் டிஸ்பிளே, மல்ட்டிபங்ஷனல் ஸ்டீயரிங் வீல் மற்றும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் கூடிய 12.3 இன்ச் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளைப் பெற்றிருக்கிறது இந்த புதிய 2024 LC 500h மாடல்.
லெக்சஸ்
இன்ஜின் மற்றும் விலை:
லெக்சஸ் நிறுவனத்தின் டிசைன் லாங்குவேஜ் இந்தப் புதிய LC 500h-லும் பிரதிபலிக்கிறது.
லித்தியம் அயன் பேட்டரியுடன் கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 3.5 லிட்டர் V6 இன்ஜினுடன் கூடிய ஹைபிரிட் செட்டப்பை பெற்றிருக்கிறது இந்த லெக்சஸ் LC 500h. இந்த செட்டப்பானது ஒட்டுமொத்தமாக 354hp பவர் மற்றும் 650Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.
இந்த செட்டப்புடன் லெக்சஸின் மல்ட்டி-ஸ்டேஜ் ஹைபிரிட் ட்ரான்ஸ்மிஷனைப் பெற்றிருக்கிறது LC 500h.
பயணிகளின் பாதுகாப்புக்காக எட்டு ஏர்பேக்குகள் மற்றும் ADAS வசதிகளையும் பெற்றிருக்கிறது இந்த லக்சரி மாடல் கார்.
இந்தியாவில் ரூ.2.39 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது புதிய '2024 லெக்சஸ் LC 500h'. தற்போது இந்த மாடலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.