இந்தியாவில் வெளியானது BMW X5 ஃபேஸ்லிப்ட் மாடல்
இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களது X5 மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் நான்காம் தலைமுறை X5 மாடலானது 2019-ல் வெளியிடப்பட்டது. பிஎம்டபிள்யூ X5-யில் என்னென்ன டிசைன்கள் மாறி இருக்கிறது: வெளிப்புற டிசைனில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. முன்பக்க பம்பரின் டிசனை சற்று மாற்றியிருக்கிறது. முகப்பு விளக்கு சற்றே சிறிய அளவிற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய DRL விளக்கு முகப்பு விளக்குடன் சேர்க்கப்பட்டிருக்கிறது. 21-இன்ச் அலாய் வீலின் டிசனையும், டெய்ல் லைட்டின் டிசைனும் சற்றே மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. டிசைனில் வேறு மாற்றங்கள் செய்யப்படவில்லை. இந்தியாவில் மெர்சிடீஸ்-பென்ஸ் GLE, வால்வோ XC90 மற்றும் லெக்சஸ் RX ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக விற்பனையாகி வருகிறது பிஎம்டபிள்யூ X5.
பிஎம்டபிள்யூ X5: வேறு என்ன அப்டேட்களைப் பெற்றிருக்கிறது X5?
உட்பக்கம் புதிதாக இரண்டு டச்ஸ்கிரீன்களைக் கொடுத்திருக்கிறது பிஎம்டபிள்யூ. 14.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் ஒன்றும், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் இந்த X5-ன் M Sport மற்றும் xLine ஆகிய இரண்டு ட்ரிம்களிலும், தற்போது 48V மைல்ட்-ஹைபிரிட் சிஸ்டத்தைப் பெற்றிருக்கின்றன. இதன் மூலம் 12hp பவர் மற்றும் 200Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்றைப் பெறுகிறது X5. விலை: (அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகளே) xடிரைவ் 40i xLine -ரூ.93.90 லட்சம் xடிரைவ் 30d xLine -ரூ.95.90 லட்சம் xடிரைவ் 40i M Sport -ரூ.1.05 கோடி xடிரைவ் 30d M Sport -ரூ.1.07 கோடி