அடுத்த செய்திக் கட்டுரை

ஆடி காரில் சென்று டீ விற்கும் இளைஞர் - பின்னணி என்ன?
எழுதியவர்
Siranjeevi
Apr 13, 2023
01:14 pm
செய்தி முன்னோட்டம்
ஆடி காரில் வந்து ஒரு இளைஞர் டீ விற்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல் செய்தியாகி பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.
சொகுசு கார்களிலேயே ஆடி கார் தான் விலை உயர்ந்த கார். இந்த காரை வைத்திருப்பவர்கள் பெரிய ஆட்களாக தான் இருக்ககூடும்.
இந்நிலையில், இளைஞர் ஒருவர் ஆடி காரில் சாலையின் ஓரத்தில் நின்றபடி டீ விற்கிறார்.
மேலும் அவர், டீ விற்க அடுப்பு, டேபிள் மற்றும் பணம் செலுத்தும் பார்கோடு என அனைத்தையும் வைத்திருக்கிறார்.
இணையத்தில் ட்ரெண்ட் ஆகவே இதனை செய்துள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
மேலும், டீ விற்கும் அந்த ஆடி கார் ஆனது, ஆடி ஏ6 சொகுசு கார். இதன் விலை ஆரம்ப விலையே 61.60 லட்சம் ஆகும்.