Page Loader
'Legend' சரவணனின் கார் கலெக்ஷனைப் பற்றித் தெரியுமா?
'லெஜண்டு சரவணனி'ன்வின் கார் கலெக்ஷன்

'Legend' சரவணனின் கார் கலெக்ஷனைப் பற்றித் தெரியுமா?

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 01, 2023
04:10 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மிகவும் பிரபலமான ஜவுளி நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் 'Legend' சரவணனைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த வருடம் 'லெஜண்ட்' என்ற தமிழ்த் திரைப்படம் ஒன்றிலும் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. லெஜண்டு சரவணாவின் வணிக நிறுவனங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அவருடைய கார் கலெக்ஷனைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு? ரோல்ஸ் ராய்ஸ் முதல் லம்போர்கினி வரை உலகின் மிகவும் விலையுயர்ந்த கார்களை தன்னுடைய கேரேஜில் வைத்திருக்கிறார் அவர். மேலும், தன்னுடைய கார்கள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட எண்ணிலேயே பதிவு செய்துமிருக்கிறார் அவர். வெள்ளை நிறத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்ட அவர், அதிகம் வெள்ளை நிற கார்களையே தன்னுடைய கலெக்ஷனில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கார் கலெக்ஷன்

லெஜண்டு சரவணனின் கார் கலெக்ஷன்: 

ரோல்ஸ் ராய்ஸ்- பேண்டம், ரெய்த், கோஸ்ட். லம்போர்கினி- லம்போர்கின் அவென்டடார், லம்போர்கினி ஹூராகேன், லம்போர்கினி உரூஸ். பென்ட்லி- பென்ட்லி ஃபிளையிங் ஸ்பர், பென்ட்லி காண்டினென்டல் GT, பென்ட்லி முல்சான் ஸ்பீடு, பென்ட்லி பென்டாயாக ஸ்பீடு. போர்ஷே- போர்ஷே 911 டர்போ எஸ், போர்ஷே கேயான் டர்போ, போர்ஷே பனமேரா GTS, போர்ஷே பனமேரா டர்போ, போர்ஷே 911 கரேரா. மெர்சிடீஸ்- மெர்சிடீஸ் E63 AMG, மெர்சிடீஸ் S63 AMG, மேபாக் 650. பிஎம்டபிள்யூ- பிஎம்டபிள்யூ X6 M, பிஎம்டபிள்யூ 760Li, பிஎம்டபிள்யூ M5. பிற கார்கள்- ஆஸ்டன் மார்டின் DB11, ஃபெராரி 488 GTB, ரேஞ்சு ரோவர் ஸ்போர்ட் SVR, வால்வோ XC90 T8, ஆஸ்டன் மார்டின் ரேபிட் S, ஜாகுவார் XJL.

Instagram அஞ்சல்

இன்ஸ்டாவில் வைரலான லெஜண்டு சரவணா கார் கலெக்ஷன்: