LOADING...
சைபர் தாக்குதல் எதிரொலி; ஜாகுவார் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் GT கார் வெளியீடு 2026க்கு ஒத்திவைப்பு 
ஜாகுவார் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் GT கார் வெளியீடு 2026க்கு ஒத்திவைப்பு

சைபர் தாக்குதல் எதிரொலி; ஜாகுவார் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் GT கார் வெளியீடு 2026க்கு ஒத்திவைப்பு 

எழுதியவர் Sekar Chinnappan
Nov 02, 2025
03:33 pm

செய்தி முன்னோட்டம்

பிரிட்டிஷ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் (Jaguar), தனது முதல் நான்கு-கதவுகள் கொண்ட எலக்ட்ரிக் GT (Electric GT) காரின் உலகளாவிய அறிமுகத்தை ஒத்திவைத்துள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாக இருந்த இந்தக் கார், தற்போது 2026 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) குழுமத்தைத் தாக்கிய கடுமையான சைபர் தாக்குதலின் எதிரொலியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. JLR குழுமத்தின் மீதான இந்தத் தீவிர சைபர் தாக்குதல், உற்பத்தி மற்றும் செயல்பாடுகளைப் பெரிதும் பாதித்தது. சோலிகுல், ஹேல்வுட் மற்றும் உல்வர்ஹாம்டன் ஆகிய ஆலைகளில் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முடக்கம்

ஐடி அமைப்புகள் முடக்கம்

சைபர் தாக்குதலால் நிறுவனத்தின் ஐடி அமைப்புகள் முடங்கியதால், புதிய ஆர்டர்களைப் பெறுவதிலும், டீலர்ஷிப்கள் மற்றும் சப்ளையர்களுடனான நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. சிஎம்சி நடத்திய ஆய்வின்படி, இந்தத் தாக்குதலால் பிரிட்டன் பொருளாதாரத்திற்கு சுமார் £1.9 பில்லியன் (சுமார் ₹22,000 கோடி) இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் தீவிரம் காரணமாகவே, ஜாகுவார் தனது புதிய எலக்ட்ரிக் GT காரின் அறிமுகத்தைத் தாமதப்படுத்த வேறு வழியின்றித் தள்ளப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் GT காரின் வெளியீடு ஜாகுவார் பிராண்டிற்கு ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும். இது முதலில் 2026 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து ஐரோப்பா மற்றும் பிற உலகச் சந்தைகளில் வெளியிடப்படும்.