இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட ரேஞ்சு ரோவர் வேலார் ஃபேஸ்லிஃப்ட்
இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட புதிய ரேஞ்சு ரோவர் வேலார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டிருக்கிறது லேண்டு ரோவர். கடந்த வாரம் இந்த புதிய மாடலுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், செப்டம்பரில் இதன் டெலிவரியைத் தொடங்கவிருக்கிறது லேண்டு ரோவர். புதிய ஃபேஸ்லிப்டின் ஒரேயொறு HSE ட்ரிம்மை, பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியிட்டிருக்கிறது லேண்டு ரோவர். மேலும், முந்தைய மாடலை விட புதிய ஃபேஸ்லிஃப்ட் வேலார் மாடலானது ரூ.3.59 லட்சம் கூடுதல் விலையில் வெளியாகியிருக்கிறது. இந்த வேலார் ஃபேஸ்லிஃப்டில், மறுவடிவம் செய்யப்பட்ட DRL, பின்பக்க பம்பர் மற்றும் டெயில் லைட்டுகளைக் கொடுத்திருக்கிறது லேண்டு ரோவர். போர்ஷே மக்கான், ஜாகுவார் F-பேஸ் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக விற்பனை செய்யப்படவிருக்கிறது இந்த புதிய வேலார்.
ரேஞ்சு ரோவர் வேலார் ஃபேஸ்லிஃப்ட்: இன்ஜின் மற்றும் விலை
புதிய வேலார் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 250hp பவர் மற்றும் 365Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 204hp பவர் மற்றும் 430Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின், என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு இன்ஜின்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த புதிய வேலார் ஒரு மைல்டு-ஹைபிரிட் மாடலாக வெளியாகியிருக்கிறது. இந்த வேலார் ஃபேஸ்லிஃப்டின் உள்பக்கம், புதிய 11.4 இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் மறுவடிவம் செய்யப்பட்ட சென்டர் கண்சோல் ஆகிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் வேலார் ஃபேஸ்லிஃப்டின் இரண்டு இன்ஜின்கள் கொண்ட வேரியன்டையும், ரூ.93 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது லேண்டு ரோவர்.