NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / மாற்று அறுவை சிகிச்சைக்காக, சிறுநீரகங்களை, லம்போர்கினி மூலம் எடுத்து சென்ற இத்தாலி போலீசார்
    ஆட்டோ

    மாற்று அறுவை சிகிச்சைக்காக, சிறுநீரகங்களை, லம்போர்கினி மூலம் எடுத்து சென்ற இத்தாலி போலீசார்

    மாற்று அறுவை சிகிச்சைக்காக, சிறுநீரகங்களை, லம்போர்கினி மூலம் எடுத்து சென்ற இத்தாலி போலீசார்
    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 26, 2022, 12:30 am 1 நிமிட வாசிப்பு
    மாற்று அறுவை சிகிச்சைக்காக, சிறுநீரகங்களை, லம்போர்கினி மூலம் எடுத்து சென்ற இத்தாலி போலீசார்
    லம்போர்கினி ஹுராகன் மூலம் கொண்டு செல்லப்பட்ட சிறுநீரகம்

    நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு, இரண்டு சிறுநீரகங்களை, மாற்றியமைக்கப்பட்ட லம்போர்கினி சூப்பர் காரைப் பயன்படுத்தி கொண்டு சென்றுள்ளனர், இத்தாலிய போலீசார். இத்தாலியின் வடகிழக்கில் உள்ள படுவாவிலிருந்து, மொடெனா வரை சென்று, பின்னர் ரோம் மருத்துவமனையை அடைந்தது. உறுப்புகளை கொண்டு செல்வதற்காக, அதிவேக ஹுராகன் சூப்பர் காருக்கு, போக்குவரத்து நெரிசல் இல்லாத, தனிப்பாதை கொடுக்கப்பட்டது. "மிக அழகான கிறிஸ்துமஸ் பரிசை வழங்க நெடுஞ்சாலையில் பயணம் செய்கிறேன் - வாழ்க்கை," என ஹுராகனின் சமூக வலை பக்கம், ஒரு படத்தை வெளியிட்டு, இந்த செய்தியை உறுதி படுத்தியுள்ளது. அதில், வாகனத்தின் முன் இந்த வாசகம் கொண்ட ஒரு பதாகை கட்டப்பட்டு, ஒரு மருத்துவ குளிர் பெட்டியும், காணப்பட்டது.

    லம்போர்கினி மூலம் கொண்டு செல்லப்பட்ட சிறுநீரகம்

    உறுப்புகளை தானமாக பெற்ற மருத்துவமனை, "மாநில காவல்துறையின் சிறப்பு கிறிஸ்துமஸ் தந்தைக்கு நன்றி, இரண்டு பேருக்கு சிறுநீரகம் பரிசாக கிடைத்துள்ளது." என்று குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த லம்போர்கினி ஹுராகன், 300km/h வேகத்தில் செல்லும் எனவும், 0-100kmh வேகத்தை 3.2 வினாடிகளில் செல்லும் திறன் கொண்டது எனவும், வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 2017ல் இந்த சொகுசு கார், லம்போர்கினி ஹுராகன் தயாரிப்பாளரால், போலீஸாருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இது வடக்கு இத்தாலியில், நெடுஞ்சாலை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டது. அதோடு, மற்ற போலீஸ் நடவடிக்கைகளுக்கும், இது போன்ற மருத்துவ அவசர தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு ஹுராகன், ரோமில், நெடுஞ்சாலை ரோந்து பணிக்கு இயக்கப்படுகிறது. லம்போர்கினியின் மற்றொரு தயாரிப்பான கல்லார்டோவும் , 2019ல், இத்தாலி காவல்துறையால் பயன்படுத்தப்பட்டது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    ஆட்டோமொபைல்
    கார்
    சொகுசு கார்கள்

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    ஆட்டோமொபைல்

    ஏப்ரல் 1 முதல் பைக் விலை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    ஹூண்டாய் வெர்னா 2023 vs ஹோண்டா சிட்டி - எது சிறந்த கார்? கார் உரிமையாளர்கள்
    13 வயதில் ஆடி க்யூ3 சொகுசு காரை வாங்கிய குழந்தை நட்சத்திரம்! கார் உரிமையாளர்கள்
    கோடைக்காலத்தில் காரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? குறிப்புகள் கார்

    கார்

    மெர்சிடிஸ் பென்ஸ் காரின் புதிய GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்! கார் உரிமையாளர்கள்
    மாருதி டாடா ஹூண்டாய் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு! விலையை சரிபார்க்கவும் கார் உரிமையாளர்கள்
    பயன்படுத்திய சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வட இந்திய பிரபலங்கள்! கார் உரிமையாளர்கள்
    உலக புகழ் பெற்ற புகாட்டி காரின் பெயிண்ட் அடிக்கும் ரகசியம் என்ன தெரியுமா? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    சொகுசு கார்கள்

    விலை உயர்ந்த Mercedes-AMG G 63 பென்ஸ் கார் - தனி சிறப்பு அம்சங்கள் என்ன? கார்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்
    இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர் கார் கலக்ஷன்

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023