NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் வெளியானது புதிய 'BMW X4 M40i' எஸ்யூவி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் வெளியானது புதிய 'BMW X4 M40i' எஸ்யூவி
    இந்தியாவில் வெளியானது புதிய 'BMW X4 M40i' எஸ்யூவி

    இந்தியாவில் வெளியானது புதிய 'BMW X4 M40i' எஸ்யூவி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 26, 2023
    02:48 pm

    செய்தி முன்னோட்டம்

    சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருக்கும் 'X4 M40i' சொகுசு கார் மாடலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்தப் புதிய எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவானது பிஎம்டபிள்யூவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் டீலர்ஷிப்களில் தொடங்கப்பட்டிருக்கிறது.

    இந்த மாடலானது பிஎம்டபிள்யூவின் M ஸ்போர்ட் ட்ரீட்மெண்டையும் பெற்றிருக்கிறது. ஸ்டாண்டர்டான வேரியன்டில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கு M ஸ்போர்ட் பேட்ஜும் அளிக்கப்பட்டிருக்கிறது.

    10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய ஸ்போர்ட் சீட்கள் மற்றும் மூன்று ஸோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் புதிய X4 M40i எஸ்யூவியில் அளிக்கப்பட்டிருக்கின்றன.

    CBU (Completely Built Unit) முறையில் இந்தப் புதிய எஸ்யூவியை இந்தியாவில் விற்பனை செய்யவிருக்கிறது பிஎம்டபிள்யூ.

    பிஎம்டபிள்யூ

    பிஎம்டபிள்யூ X4 M40i எஸ்யூவி: இன்ஜின் மற்றும் விலை 

    இந்தப் புதிய M40i எஸ்யூவி மாடலில், ஆறு சிலிண்டர்கள் கொண்ட, 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்த இன்ஜினானது 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூன்ட இணைக்கப்பட்டிருக்கிறது.

    355hp பவர் மற்றும் 500Nm டார்க்கை உற்பத்தி செய்யும் பிஎம்டபிள்யூவின் இந்த இன்ஜினானது, அதிகபட்சமாக 250 கிமீ வேகம் வரை செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும், 0-100 கிமீ வேகத்தை 4.9 நொடிகளில் எட்டுகிறது இந்த M40i-யின் இன்ஜின்.

    இந்த M40i-யில் 48V பேட்டரியுடன் மைல்டு-ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் அளித்திருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்த சொகுசு காரை இந்தியாவில் ரூ.96.2 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிஎம்டபிள்யூ
    சொகுசு கார்கள்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பிஎம்டபிள்யூ

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் ஆட்டோமொபைல்
    டாடா முதல் BMW வரை.. மே மாதம் வெளியாகவிருக்கும் கார்கள்!  டாடா மோட்டார்ஸ்
    இந்த மாதம் வெளியாகும் 2024 i5 எலெக்ட்ரிக் செடான்.. டீசர் வெளியிட்ட BMW செடான்

    சொகுசு கார்கள்

    இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர் கார் கலக்ஷன்
    மாற்று அறுவை சிகிச்சைக்காக, சிறுநீரகங்களை, லம்போர்கினி மூலம் எடுத்து சென்ற இத்தாலி போலீசார் கார்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்
    விலை உயர்ந்த Mercedes-AMG G 63 பென்ஸ் கார் - தனி சிறப்பு அம்சங்கள் என்ன? கார்

    ஆட்டோமொபைல்

    2023ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட ஸ்கிராம்ப்ளர் ரேஞ்சை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது டுகாட்டி ப்ரீமியம் பைக்
    ஷாட்கன் 650 மாடலுக்கு ARAI அமைப்பிடம் அனுமதி பெற்றிருக்கிறது ராயல் என்ஃபீல்டு ராயல் என்ஃபீல்டு
    சுமாரான விற்பனையைத் தொடர்ந்து ஹெக்டர் மாடல்களின் விலையைக் குறைத்த எம்ஜி மோட்டார் எம்ஜி மோட்டார்
    MotoGP நிகழ்வில் YZF-R3 பைக்கை காட்சிப்படுத்திய யமஹா யமஹா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025