இந்த ஆகஸ்ட் 2023-ல் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் கார்கள்
டாடா பன்ச் CNG: தங்களுடைய பன்ச் மாடலின் CNG வெர்ஷனை இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது டாடா. அந்நிறுவனத்தின் நான்காவது CNG மாடலாக இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கிறது பன்ச் CNG. இரண்டாம் தலைமுறை மெர்சிடீஸ் பென்ஸ்-GLC: கடந்தாண்டு சர்வதசே சந்தையில் வெளியான இரண்டாம் தலைமுறை GLC எஸ்யூவி மாடலை வரும் ஆகஸ்ட்-9ம் தேதி இந்தியாவில் வெளியிடவிருக்கிறது மெர்சிடீஸ்-பென்ஸ். GLC 300 பெட்ரோல் மற்றும் GLC 220d டீசல் ஆகிய இரண்டு வேரியன்ட்களையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மெர்சிடீஸ். டொயோட்டா ரூமியான்: மாருதி சுஸூகி எர்டிகாவின் ரீபேட்ஜ்டு மாடலான ரூமியானை ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. இம்மாதம் அந்த மாடலை இந்தியாவிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டொயோட்டா.
ஹூண்டாய் க்ரெட்டா, அல்கஸார் அட்வென்சர் எடிஷன்கள்:
ஏற்கனவே இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களது க்ரெட்டா மற்றும் அல்கஸார் மாடல்களின் அட்வென்சர் எடிஷன்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹூண்டாய். க்ரெட்டாவின் நைட் எடிஷனுக்கு மாற்றாகவும், அல்கஸாரின் முதல் ஸ்பெஷல் எடிஷனாவும் வெளியாகவிருக்கின்றன இந்த அட்வென்சர் எடிஷன்கள். ஆடி Q8 e-ட்ரான்: சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Q8 e-ட்ரானின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை ஆகஸ்ட்-18 அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது ஆடி. எஸ்யூவி மற்றும் கூப் பாடி ஸ்டைல்களில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது இந்த Q8 e-ட்ரான். வால்வோ C40 ரீசார்ஜ்: இந்தியாவில் XC40 ரீசாக்ஜுக்குப் பிறகு, தங்களது இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலான C40 ரீசார்ஜை இம்மாதம் வெளியிடவிருக்கிறது வால்வோ. கிட்டத்தட்ட XC40-யின் டிசைன் மற்றும் வசதிகளையே கொண்டிருக்கிறது C40 ரீசார்ஜ்.