
20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் 20 லட்ச ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் SUV கார்களின் முக்கியான 5 கார்களை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.
Renault TRIBER: இந்த மாடல் ஆனது ரூ.6.33 லட்சத்தில் கிடைக்கிறது. இதில் ED DRLகள் கொண்ட புரொஜெக்டர் ஹெட்லைட்கள், ரூஃப் ரெயில்கள், 15-இன்ச் அலாய் வீல்கள் ஏழு இருக்கை, பின்புறத்தில் கேமரா, ஏர்பேக்குகள், உள்ளன.
Maruti Suzuki Ertiga: இதன் ஆரம்ப விலை ரூ. 8.35 லட்சம் ஆகும். 7 சீட்டர் கேபின், தானியங்கி வானிலை கட்டுப்பாடு, நான்கு ஏர்பேக் மற்றும் 7-இன்ச் இன்போடைன்மெண்ட் திரையுடன் வருகிறது.
Kia Carens: ரூ. 10.2 லட்சம் தொடக்க விலையில் கிடைக்கும் இந்த MPV, 6/7 சீட்டர் அமைப்புடன், 10 இன்ச் இன்போடைன்மெண்ட் திரை கொண்டுள்ளது.
எம்பிவி கார்கள்
5 முக்கியமான எம்பிவி கார்கள் திறன்கள் அம்சங்கள் என்னென்ன?
மேலும் கியாவில் ரூஃப் ரெயில்கள், 16-இன்ச் அலாய் வீல்கள் ஏழு இருக்கைகள் கொண்ட கேபின், காற்று சுத்திகரிப்பு, சன்ரூஃப், ஆறு ஏர்பேக்குகள் ஆகியவற்றை வழங்குகிறது.
Mahindra Marazzo: இந்த கார் ரூ. 13.71 லட்சத்துக்கு கிடைக்கும். 17-இன்ச் அலாய் வீல்கள், கார்னரிங் ஹெட்லேம்ப்கள், பின்புற ஸ்பாய்லர் உள்ளன. USB சார்ஜர்கள், பல ஏர்பேக்குகள் மற்றும் 7.0-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் கன்சோல் உள்ளன.
Toyota Innova Hycross: இந்த கார் ரூ. 18.3 லட்சம் ஆரம்ப விலையில், 8-இன்ச் அலாய் வீல்கள், ஸ்வெப்ட்-பேக் எல்இடி ஹெட்லைட்கள், ஏழு இருக்கைகள் கொண்ட கேபின், பனோரமிக் சன்ரூஃப், ஆறு ஏர்பேக்குகள், ADAS செயல்பாடுகள் மற்றும் 10.1-இன்ச் மிதக்கும் வகை கொண்டுள்ளது.