Loading...
சவுதி, துருக்கி, பாகிஸ்தான் கூட்டமைப்பில் எகிப்தும் இணைய வாய்ப்பு; மத்திய கிழக்கில் புது பரபரப்பு
சவுதி, துருக்கி, பாகிஸ்தான் கூட்டமைப்பில் எகிப்தும் இணைய வாய்ப்பு

சவுதி, துருக்கி, பாகிஸ்தான் கூட்டமைப்பில் எகிப்தும் இணைய வாய்ப்பு; மத்திய கிழக்கில் புது பரபரப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 09, 2026
10:28 am

செய்தி முன்னோட்டம்

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அதிகாரப் போட்டியும் பாதுகாப்பு சூழலும் வேகமாக மாறிவரும் வேளையில், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நேட்டோ பாணியிலான புதிய முத்தரப்பு ராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன. இதன் படி, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது ஒட்டுமொத்தக் கூட்டணியின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு கூட்டாகப் பதிலடி கொடுக்கப்படும். இந்த சக்திவாய்ந்த கூட்டணி மத்திய கிழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்து இணைய வாய்ப்பு

எகிப்து இணைய வாய்ப்பு என துருக்கி வெளியுறவு அமைச்சர் தகவல்

இந்த 'மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்' வெறும் மூன்று நாடுகளுடன் மட்டும் நின்றுவிடாது என்றும், பிற நட்பு நாடுகளையும் இந்த அமைப்பின்கீழ் கொண்டுவர விரிவுபடுத்தப்படும் என்றும் துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடான் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும், பல நாடுகள் இதில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், எகிப்து நாடு விரைவில் இந்த அமைப்பில் இணையக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே இந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது.

ஈரான் எதிர்ப்பு அமைப்பா?

துருக்கி அளித்துள்ள முக்கிய விளக்கம்

இந்த புதிய ராணுவக் கூட்டணி ஈரான் நாட்டிற்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒன்றாகக் கருதப்படும் கருத்துகளைத் துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

"எங்கள் மீது தாக்குதல் நடத்தாத எந்தவொரு நாடும் எங்கள் இலக்கு அல்ல.

இது முற்றிலும் தற்காப்பு நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்." என்று ஹக்கான் ஃபிடான் தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும், ஈரான் ஆதரவுப் படைகளின் தொடர் அச்சுறுத்தல்களை சந்தித்து வரும் சவுதி அரேபியாவிற்கு இந்த சர்வதேச ராணுவக் கூட்டணி மிகப்பெரிய பாதுகாப்பாகவும் பலமாகவும் இருக்கும் எனக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT

ஈரான் எச்சரிக்கை

ஈரானின் எச்சரிக்கையும் அரசியல் வல்லுநர்களின் கணிப்பும்

இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எப்ராஹிம் ரெஸாய், துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் போடப்பட்ட காகித ஒப்பந்தங்கள் சவுதிக்கு நிரந்தரப் பாதுகாப்பைத் தராது என விமர்சித்துள்ளார்.

இதனிடையே, ஈரான் மீது நேரடியாக தாக்குதல் நடத்துவதை விட, சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பலப்படுத்தப் பாகிஸ்தானும், பாதுகாப்புத் தொழில்நுட்பப் பரிமாற்றங்களை விரைவுபடுத்தத் துருக்கியும் உடனடியாக உதவும் என பிராந்திய அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

வரவிருக்கும் நாட்களில் மேலும் பல இஸ்லாமிய நாடுகள் இதில் இணையக் கூடும்.

ADVERTISEMENT