LOADING...
நாளை ஓலா, உபெர், ராபிடோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்; ஏன்?
ஓட்டுநர்கள் தங்களது செயலிகளை (Apps) முடக்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்

நாளை ஓலா, உபெர், ராபிடோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்; ஏன்?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 06, 2026
01:46 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் ஓலா, உபெர் மற்றும் ராபிடோ போன்ற ஆப்-அடிப்படையிலான வாகன சேவைகளை வழங்கும் ஓட்டுநர்கள் நாளை (பிப்ரவரி 7) நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆப்-அடிப்படையிலான டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது செயலிகளை (Apps) முடக்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். 'ஆல் இந்தியா பிரேக்டவுன்' (All India Breakdown) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போராட்டத்தினால், நாடு முழுவதும் கார் மற்றும் ஆட்டோ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச கூலி மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஒருநாள் அடையாளப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பின்னணி

போராட்டத்தின் பின்னணி

தெலுங்கானா கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்கள் சங்கம் (TGPWU) மற்றும் பல்வேறு தேசிய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளன. இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஓட்டுநர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கோரிக்கைகள்

ஓட்டுநர்களின் முக்கிய கோரிக்கைகள்

அரசு நிர்ணயித்த குறைந்தபட்சக் கட்டண முறை இல்லாததால், நிறுவனங்கள் தன்னிச்சையாகக் கட்டணத்தை மாற்றியமைக்கின்றன. இதனால் ஓட்டுநர்களின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. வணிக ரீதியான பயணங்களுக்கு வெள்ளை நிற போர்டு கொண்ட தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் அல்லது அவற்றை வணிக வாகனங்களாக மாற்ற வேண்டும். 2025-ம் ஆண்டின் மோட்டார் வாகனத் திரட்டி வழிகாட்டுதல்களை (Motor Vehicle Aggregator Guidelines 2025) உடனடியாகச் செயல்படுத்தி, ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

Advertisement

பாதிப்பு

பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பு

நாளை காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்வோரும், வெளியூர் பயணங்களை மேற்கொள்வோரும் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை, பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் இந்தப் போராட்டத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆப்-அடிப்படையிலான சேவைகள் கிடைக்காத நிலையில், மெட்ரோ ரயில் மற்றும் அரசு பேருந்துகளை பயன்படுத்துவது சிறந்தது என்று போக்குவரத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தங்கள் உழைப்பை சுரண்டி நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதாகவும், தங்களுக்கு உரிய சமூக பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்றும் ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisement