127 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள்: பிரதமர் நாளை கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்
செய்தி முன்னோட்டம்
இந்திய வரலாற்றிலும், ஆன்மீக கலாச்சாரத்திலும் ஒரு முக்கிய மைல்கல்லாக, சுமார் 127 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட புத்தரின் புனித நினைவுச்சின்னங்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். டெல்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் (Rai Pithora Cultural Complex) நாளை (ஜனவரி 3, 2026) காலை 11 மணிக்கு The Light & the Lotus என்ற பெயரில் இந்தக் கண்காட்சி தொடங்கப்பட உள்ளது. 1898-ஆம் ஆண்டு கபிலவஸ்து அருகே உள்ள பிப்ரவா என்ற இடத்தில் வில்லியம் கிளாக்ஸ்டன் பெப்பே என்பவரால் இந்த நினைவுச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு பகுதி இங்கிலாந்துக்கும் மற்றொரு பகுதி சியாம்(தாய்லாந்து) நாட்டுக்கும் கொண்டு செல்லப்பட்டது.
மீட்பு
மீட்பு மற்றும் கண்காட்சி
கடந்த 127 ஆண்டுகளாகப் பெப்பே குடும்பத்தினரின் சேகரிப்பில் இருந்த இந்த அரிய நினைவுச்சின்னங்கள், இந்திய அரசின் தொடர் முயற்சிகளால் கடந்த 2025 ஜூலை மாதம் வெற்றிகரமாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. 1898-இல் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், 1970-களில் கண்டெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பொருட்கள் மற்றும் தற்போது மீட்கப்பட்ட விலையுயர்ந்த கற்கள் ஆகியவை முதல்முறையாக ஒரே இடத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. சாஞ்சி ஸ்தூபியின் மாதிரியை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில், புத்தரின் வாழ்க்கை மற்றும் நினைவுச்சின்னங்களின் பயணம் குறித்து விளக்க டிஜிட்டல் திரைகள் மற்றும் ஆடியோ-விஷுவல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 6-ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரையிலான சிலைகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் சடங்குப் பொருட்கள் உட்பட 80-க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Here are glimpses from the Grand International Exposition of Sacred Piprahwa Relics in Delhi. I call upon all those passionate about culture and Buddhism to come to this Exposition. pic.twitter.com/gzCV0Bkl3j
— Narendra Modi (@narendramodi) January 2, 2026