LOADING...
India AI Impact Summit 2026: மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள் மற்றும் சிஇஓக்களின் முழுப் பட்டியல்
இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களின் பட்டியல்

India AI Impact Summit 2026: மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள் மற்றும் சிஇஓக்களின் முழுப் பட்டியல்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 14, 2026
02:23 pm

செய்தி முன்னோட்டம்

திங்கட்கிழமை (பிப்ரவரி 16), புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 (India AI Impact Summit 2026) மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. "மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம்" (People, Planet and Progress) என்ற மூன்று முக்கியக் கொள்கைகளின் அடிப்படையில் 700 க்கும் மேற்பட்ட அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

உலகத் தலைவர்கள்

பங்கேற்கும் உலகத் தலைவர்கள்

இந்த மாநாட்டில் பங்கேற்க வெளியுறவு அமைச்சகம் சார்பில் 20 உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் முக்கியமானவர்கள் பின்வருமாறு:- பிரான்ஸ்: அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிரேசில்: அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஸ்பெயின்: அதிபர் பெட்ரோ சான்செஸ் இலங்கை: அதிபர் அனுர குமார திஸாநாயக்க பூடான்: பிரதமர் ஷெரிங் டோப்கே பின்லாந்து: பிரதமர் பெட்டேரி ஓர்போ ஐக்கிய அரபு அமீரகம்: ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (அபுதாபி இளவரசர்) ஐக்கிய நாடுகள் சபை: பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் மேலும் கிரீஸ், கஜகஸ்தான், மொரிஷியஸ், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

சிஇஓக்கள்

தொழில்நுட்பத் துறை ஜாம்பவான்கள்

உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் சிஇஓக்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்: சுந்தர் பிச்சை (கூகுள் & ஆல்பாபெட் சிஇஓ) பில் கேட்ஸ் (மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர்) சாம் ஆல்ட்மேன் (ஓபன்ஏஐ சிஇஓ) ஜென்சன் ஹுவாங் (என்விடியா சிஇஓ) முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர்) நடராஜன் சந்திரசேகரன் (டாடா சன்ஸ் தலைவர்) கிரண் மஜும்தார் ஷா (பயோகான் தலைவர்)

Advertisement

முக்கிய அம்சங்கள்

மாநாட்டின் முக்கிய அம்சங்கள்

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து, முன்னணி நிறுவனங்களின் சிஇஓக்களுடன் வட்டமேஜை மாநாடு நடத்துவார். இதில் வேலைவாய்ப்பு, ஏஐ பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து விரிவாக விவாதிக்கப்படும். சுமார் 45 நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்வதால், டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏஐ ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் குறித்து இந்த மாநாட்டின் மூலம் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement