LOADING...
மத்திய கிழக்கு நாடுகளுடனான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்: தாயகம் திரும்பும் இந்தியர்கள்
மத்திய கிழக்கு நாடுகளுடனான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

மத்திய கிழக்கு நாடுகளுடனான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்: தாயகம் திரும்பும் இந்தியர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 03, 2026
08:07 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக முடங்கியிருந்த வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகள், தற்போது பகுதி வாரியாக சீரமைக்கப்பட்டு வருகின்றன. திங்கட்கிழமை (மார்ச் 2, 2026) அபுதாபியிலிருந்து புறப்பட்ட Etihad விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரைஇறங்கியது. மஸ்கட் மற்றும் அபுதாபியிலிருந்து திரும்பிய பயணிகள் கூறுகையில், "வளைகுடா நாடுகளின் வான்பரப்பில் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்படுவதை நேரில் காண முடிந்தது. வானம் மிகவும் பரபரப்பாகவும், பதற்றமாகவும் காணப்படுகிறது," எனத் தெரிவித்தனர்.

அப்டேட்கள்

முக்கிய விமானச் சேவை அப்டேட்கள்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: மார்ச் 3 முதல் மஸ்கட் - இந்தியா இடையிலான சேவைகளை மீண்டும் தொடங்குகிறது. டெல்லி, கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு, மும்பை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்குச் சேவைகள் வழங்கப்படும். இண்டிகோ: ஜித்தா நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மார்ச் 3-ஆம் தேதி 10 சிறப்பு மீட்பு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. ஈஸ் மை ட்ரிப்: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவிலிருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு மார்ச் 3 அன்று சிறப்பு சார்ட்டர் விமானங்களை இயக்கவுள்ளது. எமிரேட்ஸ் மற்றும் ஃபிளை துபாய்: மார்ச் 2 மாலை முதல் குறைந்த அளவிலான விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ளன.

Advertisement