Loading...
நகை பிரியர்கள் கவனத்திற்கு..சர்ரென உயர்ந்தது தங்க விலை; இன்றைய விலை நிலவரம் என்ன?
மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது

நகை பிரியர்கள் கவனத்திற்கு..சர்ரென உயர்ந்தது தங்க விலை; இன்றைய விலை நிலவரம் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 22, 2026
10:35 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, புதன்கிழமை (ஜூலை 22), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹210 அதிகரித்து ₹13,430 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1, 680 அதிகரித்து ₹1,07,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹229 அதிகரித்து ₹14,651 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1, 832 அதிகரித்து ₹1,17,208 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹210 அதிகரித்து ₹11,245 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1680 அதிகரித்து ₹89,960 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 அதிகரித்து ₹245 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,45,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT