Loading...
பேஸ்புக் நட்பால் வந்த ஆபத்து; கிரிப்டோகரன்சி மோசடியில் ரூ.92.48 லட்சம் இழந்த வதோதரா நபர்
கிரிப்டோகரன்சி மோசடியில் ரூ.92.48 லட்சம் இழந்த வதோதரா நபர்

பேஸ்புக் நட்பால் வந்த ஆபத்து; கிரிப்டோகரன்சி மோசடியில் ரூ.92.48 லட்சம் இழந்த வதோதரா நபர்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 24, 2026
08:14 pm

செய்தி முன்னோட்டம்

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஜாஸ்மின் என்ற ரசாயன நிறுவன ஊழியர், கிரிப்டோகரன்சி முதலீடு மூலம் 60% வரை அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறிய நபரால் ரூ.92.48 லட்சத்தை இழந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பேஸ்புக் மூலம் அறிமுகமான அதிதி மிஷ்ரா என்ற பெண், வாட்ஸ்அப் வழியே இவருடன் பழகி கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்யத் தூண்டியுள்ளார். நிதி சிக்கலில் சிக்கிய பாதிக்கப்பட்ட நபர் தற்பொழுது சைபர் கிரைம் காவல்துறையினரை அணுகியுள்ளார்.

போலி இணையதளம்

போலி இணையதளம் மற்றும் மோசடி கும்பலின் ரகசிய நகர்வுகள்

மோசடி பெண் அனுப்பிய globixvault.com என்ற போலி கிரிப்டோ வர்த்தக இணையதள லிங்க் மூலம் ஜாஸ்மின் முதலில் ரூ.10,000 முதலீடு செய்தார்.

அந்த இணையதளத்தில் அதிக லாபம் கிடைப்பது போல போலியாகக் காட்டப்பட்டதால், அவர் மேலும் தொகையை முதலீடு செய்யத் தொடங்கினார்.

தன்னுடைய மாமா நிதீஷ் குமார் என்பவரையும் இதில் இணைத்து, ஜாஸ்மினை மேலும் பல தவணைகளில் பெரும் தொகையை செலுத்த வைத்தனர்.

இதன் மூலம் தவணை முறையில் மொத்தம் ரூ.94,27,614 தொகையை ஜாஸ்மின் மாற்றியுள்ளார்.

நம்பிக்கை

நம்பிக்கை ஏற்படுத்த சிறிய தொகை திரும்ப அளிப்பு

பாதிக்கப்பட்ட நபரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, மோசடி கும்பல் தொடக்கத்தில் ரூ.71,729 மதிப்பிலான 717.29 யுஎஸ்டிடி கிரிப்டோ தொகையை அவரின் பைனான்ஸ் வாலட்டிற்கு அனுப்பியது.

மேலும், போர்டல் மூலம் ரூ.1,07,606 தொகையையும் திரும்ப அளித்தனர்.

மொத்தமாக ரூ.94 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்த நிலையில், மீதமுள்ள ரூ.92,48,279 தொகையைத் திரும்ப பெற முடியாமல் போன பிறகே தான் ஏமாற்றப்பட்டதை ஜாஸ்மின் உணர்ந்தார். தொடர்ந்து அந்த போலி கணக்குகளும் முக்கப்பட்டன.

ADVERTISEMENT

சைபர் கிரைம்

வங்கி கணக்குகள் மற்றும் யுபிஐ மூலம் தீவிர சைபர் விசாரணை

பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில், வதோதரா சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட நபர் பணம் அனுப்பிய யுபிஐ முகவரிகள், வங்கிச் சான்றுகள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களை கொண்டு பணத்தை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் தெரியாத நபர்களின் அதிக லாப வாக்குறுதிகளை நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT