LOADING...
'NemBharat' கால் டாக்ஸி சேவை: ஓலா, ஊபருக்கு செக்; ஒரு பைசா கூட கமிஷன் கிடையாது
கூடுதல் கட்டணம் வசூலிக்காத 'NemBharat' என்ற புதிய சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது

'NemBharat' கால் டாக்ஸி சேவை: ஓலா, ஊபருக்கு செக்; ஒரு பைசா கூட கமிஷன் கிடையாது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2026
05:31 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் கால் டாக்ஸி சந்தையில் தற்போது ஓலா மற்றும் ஊபர் (Uber) நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், ஓட்டுநர்களிடம் கமிஷன் பெறாத மற்றும் பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்காத 'NemBharat' என்ற புதிய சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. 'வேர்ல்ட் எகனாமிக் மொபிலிட்டி லிமிடெட்' (WEML) நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படும் இந்தத் தளம், 'நாராயணிஹிதி டிரஸ்ட்' மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

அம்சங்கள்

பயணிகளுக்கும் லாபம்; ஓட்டுனர்களுக்கு லாபம்

ஸீரோ கமிஷன்: பொதுவாக மற்ற நிறுவனங்கள் ஓட்டுநர்களின் வருமானத்தில் 20% முதல் 30% வரை கமிஷன் எடுக்கும். ஆனால், நெம்பாரத் ஓட்டுநர்களிடமிருந்து எந்த கமிஷனோ அல்லது சந்தா கட்டணமோ வசூலிக்காது. இதனால் ஓட்டுநர்கள் தங்களின் முழு வருமானத்தையும் பெற முடியும். சர்ஜ் பிரைஸிங் கிடையாது: மழைக்காலம் அல்லது அதிக தேவை உள்ள நேரங்களில் பயணிகளிடம் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டண முறை இதில் கிடையாது. அனைத்து நேரங்களிலும் நிலையான மற்றும் நியாயமான கட்டணமே வசூலிக்கப்படும். முன்பணம் மற்றும் டிஜிட்டல் முறை: இது ஒரு 'ப்ரீபெய்ட்' மற்றும் ரொக்கமில்லா பணப்பரிமாற்ற முறையை கொண்ட தளமாக இருக்கும்.

விவரங்கள்

சேவை எப்போது தொடக்கம்?

சமீபத்தில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 'பாரத் டாக்ஸி' ஒரு கூட்டுறவு அமைப்பாகச் செயல்படுகிறது. அதில் ஓட்டுநர்கள் பங்குதாரர்களாக இருப்பார்கள். ஆனால், 'நெம்பாரத்' என்பது ஒரு தனியார் முயற்சியாகும். இருப்பினும், இரண்டுமே ஓட்டுநர்களின் நலன் மற்றும் பயணிகளின் சுமையைக் குறைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தச் சேவையின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் முதற்கட்டமாகச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார், ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் பைக் டாக்ஸி என அனைத்து போக்குவரத்து வசதிகளும் இதில் இடம்பெறும்.

Advertisement