LOADING...
இசைஞானி இளையராஜாவிற்கு அதிர்ச்சி! சரிகம வசமுள்ள 134 பட பாடல்களை பயன்படுத்த தடை
இளையராஜா, தற்போது ஒரு சிக்கலான காப்புரிமை பிரச்சனையில் சிக்கியுள்ளார்

இசைஞானி இளையராஜாவிற்கு அதிர்ச்சி! சரிகம வசமுள்ள 134 பட பாடல்களை பயன்படுத்த தடை

எழுதியவர் Venkatalakshmi V
Feb 17, 2026
08:23 am

செய்தி முன்னோட்டம்

பல தசாப்தங்களாக இந்திய திரையிசையை தனது பாடல்களால் ஆண்டு வரும் 'இசைஞானி' இளையராஜா, தற்போது ஒரு சிக்கலான காப்புரிமை பிரச்சனையில் சிக்கியுள்ளார். 134 திரைப்படங்களில் இடம்பெற்ற இசை மற்றும் பாடல்களின் உரிமையை தான் கொண்டிருப்பதாக கோருவதற்கும், அவற்றை பயன்படுத்துவதற்கும் அவருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. Saregama India Limited நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்து, அந்தப் படங்களின் இசை மற்றும் பாடல்களுக்கான உலகளாவிய காப்புரிமையை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், இளையராஜா அந்த பாடல்களின் உரிமையை உரிமை கொண்டாடுவதோடு, டிஜிட்டல் தளங்களில் அவற்றை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

உத்தரவு

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

பிப்ரவரி 13 அன்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,"சரிகம நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற படைப்புகளை இளையராஜா பயன்படுத்துவதோ, மற்றவர்களுக்கு உரிமம் வழங்குவதோ அந்த நிறுவனத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், நீதிமன்றம் பட்டியலிட்டுள்ள 134 திரைப்பட பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல்களின் உரிமையாளர் தான் என்று மூன்றாம் நபர்களிடம் அவர் உரிமை கோரவும் கூடாது. கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ல் வெளியான 'அகத்தியா' திரைப்படத்தில் 'என் இனிய பொன் நிலாவே' பாடலை பயன்படுத்தியபோதும் இதே போன்ற சர்ச்சை எழுந்தது. தற்போது 134 படங்களின் பாடல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது இளையராஜாவின் இசை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement