ஏப்ரல் 2026-ல் ஷகீராவின் இந்திய இசைப் பயணம்: டிக்கெட் விலை எவ்வளவு?
செய்தி முன்னோட்டம்
2007-ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக இந்தியா வரும் ஷகீரா, வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி மும்பை மகாலட்சுமி ரேஸ்கோர்ஸிலும், ஏப்ரல் 15-ஆம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்திலும் தனது இசை மழையை பொழிய உள்ளார். இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை நேற்று (மார்ச் 1, 2026) தொடங்கியது. முன்னெப்போதும் இல்லாத வகையில் டிக்கெட் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. செய்திகளின்படி, பொது நுழைவுக்கான ஆரம்ப விலை ரூ. 6,000 என்றும், விஐபி செக்ஷனுக்கான விலை ரூ. 14,500 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பிளாட்டினம் லவுஞ்ச் விலை, ரூ. 24,500 ஆகவும், HSBC ஸ்டார்ஸ்ட்ரக் லவுஞ்ச் ரூ. 32,000 (மும்பை), ரூ. 30,500 (டெல்லி) ஆகவும் நிர்ணயம்.
விவரங்கள்
சமூக நலன் மற்றும் ஷகீராவின் ஆர்வம்
"இந்தியாவில் கச்சேரி நடத்துவது எனக்கு எப்போதும் ஸ்பெஷல்," என்று கூறியுள்ள ஷகீரா, இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 2030-க்குள் 'பசியில்லா உலகம்' என்ற ஐநா-வின் இலக்கை நோக்கிய பயணமாக இது அமையும். சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்தியாவின் கச்சேரி டிக்கெட் விற்பனை சுமார் 12,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. 2025-ல் மட்டும் 5.6 லட்சம் இந்தியர்கள் கச்சேரிகளுக்காக ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பயணம் செய்துள்ளனர். Coldplay மற்றும் Kanye West போன்ற உலகத் தரம் வாய்ந்த கலைஞர்களின் வரிசையில் தற்போது ஷகீராவின் வருகையும் இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.