Loading...
234 தொகுதிகளிலும் ஏசி டியூஷன் சென்டர்: நடிகர் தனுஷ் நற்பணி இயக்கத்தின் அடுத்த அரசியல் நகர்வு
நடிகர் தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் 234 தொகுதிகளிலும் இலவச ஏசி டியூஷன் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

234 தொகுதிகளிலும் ஏசி டியூஷன் சென்டர்: நடிகர் தனுஷ் நற்பணி இயக்கத்தின் அடுத்த அரசியல் நகர்வு

எழுதியவர் Vasuki
Oct 27, 2026
08:29 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்க உள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் சூழலில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பள்ளி மாணவர்களுக்காக ஏசி வசதியுடன் கூடிய இலவச டியூஷன் சென்டர்களைத் தொடங்க அவரது நற்பணி இயக்கம் திட்டமிட்டுள்ளது. ரசிகர் மன்றத்தைக் கட்டமைக்கப்பட்ட நற்பணி இயக்கமாக மாற்றிய பின் அவர் முன்னெடுக்கும் களப்பணிகள் கவனத்தை ஈர்த்துள்ளன. இதனிடையே, சென்னையில் நடைபெற்ற மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் 2,000 பெண் நிர்வாகிகள் பங்கேற்றனர். அரசியல் பேச்சுகளைத் தவிர்த்த தனுஷ், வந்திருந்த அனைவருக்கும் காமாட்சி அம்மன் விளக்கை வழங்கி, ஒவ்வொருவருடனும் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டு உற்சாகப்படுத்தினார். அவரது இந்த நகர்வுகள் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

234 தொகுதிகள்

இலவச ஏசி பயிற்சி மையங்கள்

அந்த மகளிர் சந்திப்பைத் தொடர்ந்து, அடுத்த அதிரடி நகர்வாக முதல் தலைமுறை வாக்காளர்களையும் மாணவர் சமூகத்தையும் ஈர்க்கும் வகையில் இந்த இலவச டியூஷன் சென்டர் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அனைத்து நவீன வசதிகள் மற்றும் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளுடன் இந்த மையங்கள் செயல்படவுள்ளன.

ஒரு மையத்திற்கு 3 தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஒரு உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர்.

இவர்களுக்கான மாத ஊதியம் தனுஷ் நற்பணி இயக்கம் மூலமாகவே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் முதற்கட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் தொடங்கப்பட்டு, பின்னர் 234 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதற்கான ஆரம்பக்கட்ட ஒருங்கிணைப்புப் பணிகள் வரும் ஜனவரி மாதம் முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT